For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

7-வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள்...69 ஆண்டு சாதனையை முறியடித்தது புஜாரா- சஹா ஜோடி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 7-வது விக்கெட்டுக்கு 199 ரன்கள் குவித்து 69 ஆண்டுகால சாதனையை முறியடித்தது புஜாரா- சஹா ஜோடி.

By Mathi

ராஞ்சி: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் 7-வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் குவித்து 69 ஆண்டு கால சாதனையை புஜாரா- சஹா ஜோடி முயற்டித்து சாதித்துள்ளது.

ராஞ்சியில் ஆஸ்திரேலியா- இந்தியா அணிகள் இடையேயான 3-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் ஆடிய ஆஸ்திரேலியா அணி 451 ரன்களைக் குவித்தது.

Pujara, Saha break 69-year-old Indian record

பின்னர் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 603 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. புஜாரா- சஹா ஜோடி அபாரமாக ஆடியது.

புஜாரா 202 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். சஹா 117 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 7-வது விக்கெட்டுக்கு 199 ரன்களைக் குவித்தது.

முன்னர் அடிலெய்டுவில் கடந்த 1948-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விஜய் ஹசாரே, ஹேமு அதிகாரி ஜோடி 7-வது விக்கெட்டுக்கு 132 ரன்கள் குவித்ததே இதுவரையிலான சாதனையாக இருந்தது. தற்போது 7-வது விக்கெட்டுக்கு 199 ரன்களைக் குவித்து என்ற 69 ஆண்டுகால சாதனையை புஜாரா- சஹா ஜோடி முறியடித்துள்ளது.

Story first published: Sunday, March 19, 2017, 17:11 [IST]
Other articles published on Mar 19, 2017
English summary
Pujara and Saha's stand of 199 is now the highest seventh-wicket partnership ahead of Hemu Adhikari and Vijay Hazare who shared a 132-run stand in Adelaide in 1948.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X