For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல்.. மும்பையை 3 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது புனே

ஐ.பி.எல் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரைசிங் புனே ஜெயின்ட்ஸ் 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

By Karthikeyan

மும்பை: ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 3 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது புனே.

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற ஐபிஎல் லீக்கின் 28-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - புனே சூப்பர் ஜெயன்ட் அணிகள் மோதின. டாசில் வென்று முதலில் பீல்டிங் தேர்வு செய்தது மும்பை.

Pune beat Mumbai by 3 runs in last over thriller, win 'Maharashtra Derby'

இதையடுத்து களமிறங்கிய புனே சூப்பர்ஜெயன்ட் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ராகுல் திரிபாதி 31 பந்தில் 45 ரன்களும் ரகானே 32 பந்தில் 38 ரன்களும் எடுத்து வெளியேறினர். டோணி 7 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டானார்.

மும்பை தரப்பில் கரண் சர்மா, பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். ஹர்பஜன் சிங் , மிட்செல் ஜான்சன் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

இதன் பின்னர் 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ், 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் 3 ரன்கள் வித்தியாசத்தில் புனே அணி வெற்றி பெற்றது. கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 39 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார்.

சிறப்பாக பந்து வீசிய பென்ஸ் ஸ்டோக் 4 ஓவர்களில் 21 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதில் ஒரு ஓவர் மெயிடன் ஆகும். ஆட்டநாயகன் விருது ஸ்டோகிற்கு வழங்கப்பட்டது.

Story first published: Tuesday, April 25, 2017, 3:46 [IST]
Other articles published on Apr 25, 2017
English summary
Mumbai Indians' captain Rohit Sharma won the toss and elected to chase against Rising Pune Supergiant in the Indian Premier League (IPL) 2017 league match here on Monday 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X