For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

முதல் டெஸ்ட்: இந்திய பந்து வீச்சில் நிலைகுலைந்த ஆஸி.! விக்கெட்டுகள் மளமள சரிவு

205 ரன்களுக்கே 9வது விக்கெட்டை ஆஸி. இழந்தபோதும், கடைசியில் ஸ்டார்க் முட்டுக்கொடுத்துக் கொண்டிருப்பதால் இந்தியாவால் இன்று ஆஸ்திரேலியாவை ஆல்-அவுட் செய்ய முடியவில்லை.

By Veera Kumar

புனே: இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. டாசில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்து ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 256 ரன்களை எடுத்திருந்தது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, நான்கு போட்டிகள்கொண்ட பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் புனேயில் இன்று தொடங்கியது. டாசில் வெற்றி பெற்ற ஆஸி. கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.

Pune test: Australia won the toss and decided to bat first

அந்த அணியில் அதிகபட்சமாக ரென்ஷா 68 ரன்கள் எடுத்தார். ஆட்டத்தின் நடுவே வயிற்று வலியால் பல மணி நேரம் பெவிலியனில் ஓய்வெடுத்து பிறகு வந்து ஆடி இந்த ரன்களை எடுத்தார். ஆனால் 156 பந்துகளை அவர் சந்தித்தார். இதன்பிறகு மிட்சேல் ஸ்டார்க் 58 பந்துகளில் அவுட்டாகாமல் 57 ரன்கள் எடுத்ததே அதிகபட்ச ரன்னாகும்.

அதிரடி வீரர் டேவிட் வார்னர், 38, கேப்டன் ஸ்மித் 95 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து முறையே உமேஷ் யாதவ் மற்றும் அஸ்வின் பந்து வீச்சில் அவுட்டாகினர். 205 ரன்களுக்கே 9வது விக்கெட்டை ஆஸி. இழந்தபோதும், கடைசியில் ஸ்டார்க் முட்டுக்கொடுத்துக் கொண்டிருப்பதால் இந்தியாவால் இன்று ஆஸ்திரேலியாவை ஆல்-அவுட் செய்ய முடியவில்லை. மறுமுனையில் கடைசி பேட்ஸ்மேனாக ஹசில்வுட் 1 ரன்னுடன் களத்தில் உள்ளார்.

இந்திய அணி: முரளி விஜய், ராகுல், புஜாரா, விராத் கோஹ்லி, ரஹானே, விருதிமான் சாஹா, ஆர்.அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஜே.யாதவ், இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ்.

ஆஸ்திரேலிய அணி விவரம்: டேவிட் வார்னர், ரென்ஷா, ஸ்மித், மார்ஷ், ஹேன்ட்ஸ்கோம்ப், எம்.மார்ஷ், வேட், எஸ் ஓ'கீபே, நேதன் லையன், மிட்சேல் ஸ்டார்க், ஹஸ்சில்வுட்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளிடையே இதுவரை நடந்துள்ள 90 டெஸ்ட் போட்டிகளில், ஆஸ்திரேலியா 40 வெற்றிகளையும், இந்தியா 24 வெற்றிகளையும் பெற்றுள்ளன. 25 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.

14 முறை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதில், ஆஸ்திரேலியா அணியால் நான்கு முறை மட்டுமே தொடரை கைப்பற்ற முடிந்தது.

Story first published: Thursday, February 23, 2017, 17:01 [IST]
Other articles published on Feb 23, 2017
English summary
Australia have won the toss and have decided to bat first against India in the first test.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X