For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அசத்தல் பவுலிங்.. டெஸ்ட் பவுலர்களில் அஸ்வினுக்கு முதல் ரேங்க்!

By Veera Kumar

துபாய்: இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், ஐசிசி டெஸ்ட் பவுலர் தரவரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.

இன்று வெளியான தர வரிசை பட்டியலில், ஏற்கனவே முதலிடத்தில் இருந்த பாகிஸ்தான் ஸ்பின்னர் யாசிர் ஷாவை பின்னுக்கு தள்ளி அஸ்வின் முதலிடம் பிடித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இரு இன்னிங்சுகளிலும் சேர்த்து 10 விக்கெட்டுகளை வீழ்த்தியதால் யாசிர் ஷா முதலிடத்தை பிடித்திருந்தார். 2வது டெஸ்டில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் யாசிர் ஷாவை, 'வச்சி செய்ததால்' புள்ளிகளை இழந்தார் யாசிர் ஷா.

அபார பவுலிங்

அபார பவுலிங்

அஸ்வின் 876 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடிக்க முக்கிய காரணம், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்டில் அவர் வழங்கிய பங்களிப்புதான் என்று தெரிகிறது.

அமோக வெற்றி

அமோக வெற்றி

இந்தியா அப்போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 92 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அஸ்வின் வீழ்த்திய, 7 விக்கெட்டுகள் இதற்கு முக்கிய காரணம்.

மீண்டும் முதலிடம்

மீண்டும் முதலிடம்

2015ம் ஆண்டு இறுதியில் அஸ்வின் ஐசிசி டெஸ்ட் பவுலர்கள் தர வரிசையில் முதலிடம் பிடித்திருந்தார். இதன்பிறகு முதல் பத்து இடங்களுக்குள் சுற்றி வந்த அஸ்வின் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.

யாசிர் ஷா

யாசிர் ஷா

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ரன்களை மலைபோல வாரி வழங்கிவிட்டு, வெறும் 1 விக்கெட்டை மட்டுமே வீழ்த்திய யாசிர் ஷா, 5வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

வேகப்பந்து வீச்சாளர்கள்

வேகப்பந்து வீச்சாளர்கள்

அஸ்வினுக்கு அடுத்தபடியாக, இங்கிலாந்து வேக பவுலர்களான, ஜேம்ஸ் ஆன்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், தென் ஆப்பிரிக்காவின் டேல் ஸ்டெயின் ஆகியோர் 2வது முதல் 4வது இடம் வரை உள்ளனர்.

ஜடேஜாவுக்கும் இடம்

ஜடேஜாவுக்கும் இடம்

இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா 6வது இடத்திலும், நியூசிலாந்தின் டிரென்ட் பவுல்ட், ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹஸ்சில்வுட், தென் ஆப்பிரிக்காவின் மோர்னே மோர்க்கல் மற்றும் வெர்னன் பிளான்டர் ஆகியோர் முறையே, 7வது முதல் 10வது வரையிலான இடங்களில் உள்ளனர்.

Story first published: Tuesday, July 26, 2016, 15:55 [IST]
Other articles published on Jul 26, 2016
English summary
Indian offspinner Ravichandran Ashwin today (July 26) became the number one Test bowler again, after taking 7 wickets in the 1st Test against West Indies on Sunday (July 24).
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X