For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து டோணி ஏன் ஓய்வு பெற்றார் தெரியுமா?: டைரக்டர் சாஸ்திரி

By Siva

டெல்லி: டோணி ஏன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் என்பதற்கான காரணத்தை இந்திய அணியின் டைரக்டரான ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

டோணி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்த ஆண்டின் துவக்கத்தில் அறிவித்தார். இந்நிலையில் டோணி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஏன் அறிவித்தார் என்பதை இந்திய அணியின் டைரக்டர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

டோணி

டோணி

கிரி்க்கெட் மூன்று வகையாக விளையாடப்படுவதை டோணி உணர்ந்து கொண்டார். அது அவருக்கு கடினமாகவும் இருந்தது.

ரெடி

ரெடி

அணியை வழிநடத்த ஒருவர் தயாராகிவிட்டார் என்பது டோணிக்கு தெரிந்திருந்தது. அதனால் தான் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

நல்ல முடிவு

நல்ல முடிவு

டோணி ஏன் ஓய்வு பெறும் முடிவை எடுத்தார் என நீங்களே யோசித்து பாருங்கள். மீடியா உள்பட அனைவரின் மனதிலும் கோஹ்லி தான் வருங்கால கேப்டன் என்று இருந்தது. டோணியின் முடிவு நல்ல முடிவு ஆகும்.

கோஹ்லி

கோஹ்லி

டோணி ஓய்வு பெறுவதாக அறிவித்த உடனேயே விராட் தான் அந்த இடத்திற்கு வரக்கூடியவராக இருந்தார். விராட் தற்போது தானே கேப்டனாகியுள்ளார். காலம் செல்ல செல்ல அவர் வெற்றி பெறுவதை நீங்கள் பார்ப்பீர்கள்.

கேப்டன்

கேப்டன்

ஒவ்வொரு கேப்டனுக்கும் ஒவ்வொரு ஸ்டைல் உள்ளது. விராட் சிறப்பாக விளையாடி வெற்றி பெறுவார். அவர் எதிலும் சிறந்து விளங்குவார் என்றார் சாஸ்திரி.

Story first published: Friday, August 28, 2015, 15:33 [IST]
Other articles published on Aug 28, 2015
English summary
Team India director Ravi Shastri told that Dhoni retired from test cricket as he knew that Kohli was ready to lead.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X