For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கிரிக்கெட், கால்பந்து டென்னிஸ், சமூக சேவை.. டிவில்லியர்ஸ் எனும் சகலகலா வல்லவன்!

By Veera Kumar

பெங்களூர்: ஐபிஎல் கிரிக்கெட் ரசிகர்கள் வாயில் நேற்று இரவு முதல் முனுமுனுக்கும் பெயர் ஏ.பி.டி.., ஏ.பி.டி. ஏ.பி.டிவில்லியர்சை ரசிகர்கள் செல்லமாக கூப்பிடுவது இப்படித்தான்.

பெங்களூரில் நேற்றிரவு நடைபெற்ற குவாலிபையர் சுற்றில், குஜராத் லயன்ஸ் அணியை வீழ்த்த தனி ஆளாய் நின்று போராடியவர் டிவில்லியர்ஸ்.

ஒருபக்கம் சாரல் மழை போல விக்கெட் விழுந்து கொண்டிருந்தாலும் மறுமுனையில் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பெங்களூரை வெற்றிபெறச் செய்தார் டிவில்லியர்ஸ்.

அசராத டிவில்லியர்ஸ்

அசராத டிவில்லியர்ஸ்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோஹ்லி டக் அவுட்டான நிலையில், கெயில், வாட்சன், ராகுல், சச்சின் பேபி என வரிசையாக பெவிலியனுக்கு நடைகட்டியபோதும், அசராமல் நின்று தாக்கினார் டிவில்லியர்ஸ்.

வெற்றி

வெற்றி

கடைசிவரை அவுட்டாகாமல் நின்று 78 ரன்கள் விளாசிய டிவில்லியர்ஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூர் அணியை வெற்றி பெறச் செய்து பைனலுக்குள் கை பிடித்து அழைத்துச் சென்றார்.

சகலகலா வல்லவன்

சகலகலா வல்லவன்

டிவில்லியர்சை கிரிக்கெட் வீரராக மட்டுமே பலருக்கும் தெரியும். ஆனால் அவர் ஒரு சகலகலா வல்லவன். ஆம்.. உண்மையில் இந்த பட்டப் பெயருக்கு முற்றிலும் பொருந்தக்கூடியவர்தான் தென் ஆப்பிரிக்காவின், நம்பர் 1 மாஸ்டர் பிளாஸ்டரான, டி வில்லியர்ஸ்.

ஹாக்கி, கால்பந்து

ஹாக்கி, கால்பந்து

தென் ஆப்பிரிக்க ஜூனியர் தேசிய ஹாக்கி அணியில், கோல் கீப்பராக ஆடியவர் டிவில்லியர்ஸ். ஜூனியர் தேசிய கால் பந்து அணிக்காகவும் தேர்வானவர் டிவில்லியர்ஸ்.

ரக்பி, நீச்சல்

தென் ஆப்பிரிக்காவின் ஜூனியர் ரக்பி அணியின் கேப்டனாக செயல்பட்ட டிவில்லியர்ஸ், தென் ஆப்பிரிக்க பள்ளிகள் அளவிலான நீச்சல் போட்டியில் பங்கேற்று 6 பதக்கங்கள் வென்றுள்ளார்.

தடகளம்

தென் ஆப்பிரிக்க ஜூனியர் தடகள போட்டியில் அதி விரைவில் 100 மீட்டர் ஓடியவர், ஜூனியர், டேவிஸ் கப் டென்னிஸ் தொடருக்காக தென் ஆப்பிரிக்கா சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர். 19 வயதுக்குட்பட்டோர் தேசிய பாட்மின்டன் சாம்பியன் பட்டமும் வென்றவர் டி வில்லியர்ஸ்.

கோல்ப்பும்

இத்தோடு விடுவாரா டிவில்லியர்ஸ். 19 வயதுக்குட்பட்டோர் கோல்ப் தொடரையும் வென்றுள்ளார் இவர். ஒரு விளையாட்டு துறையில் சிறந்து விளங்குவதற்கு படாதபாடுபடும் மக்கள் மத்தியில் இத்தனை ஆட்டங்களில் டிவில்லியர்ஸ் சாம்பியன்.

தொண்டு

கேப்டவுன் நகரில் செயல்படும் புற்றுநோய் மருத்துவமனையை தொடங்கி, அதில் மாற்றுத்திறனாளி சிறார்களுக்கும் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்துள்ளார்.

கிராம தந்தை

ஜிம்பாப்வே நாட்டில் ஒரு கிராமத்தையே தத்து எடுத்துள்ள டிவில்லியர்ஸ், அக்கிராம மக்கள் மேம்பாட்டுக்காக நிதி உதவி செய்து வருகிறார்.

கிரிக்கெட்டிலும் சாதனை

கிரிக்கெட்டிலும் சாதனை

கிரிக்கெட்டிலும் இவரது சாதனைக்கு பஞ்சமில்லை. 31 பந்துகளில் சதம், 16 பந்துகளில் அரை சதம் விளாசிய ஒரே வீரர் டிவில்லியர்ஸ்தான். பாப் பாடல்களிலும் டிவில்லியர்ஸ் சிறந்து விளங்குகிறார். இவரை போன்ற அனைத்துறை வல்லுநர் ஒருவர் இனிமேல் பிறந்துதான் வர வேண்டும்.

Story first published: Wednesday, May 25, 2016, 10:13 [IST]
Other articles published on May 25, 2016
English summary
AB De Villiers. Do u know him.?? I think u know him as a cricketer from South Africa and playing for Royal Challenger Bangalore in IPL. Now know some thing more about him:
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X