For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பதுங்கி பாய்ந்த புனே.. பெங்களூரை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது

புனே அணிக்கெதிராக 9 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள் மட்டுமே எடுத்து 61 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது பெங்களூர்.

By Karthikeyan

புனே: ஐ.பி.எல். லீக் ஆட்டத்தில் பெங்களூருக்கு எதிரான இன்றைய போட்டியில் புனே அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ஐ.பி.எல். தொடரில் இன்று மாலை 4 மணிக்கு புனேயில் நடைபெற்ற லீக் போட்டியில் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. இதில் டாசில் வென்ற பெங்களூர் கேப்டன் விராட் கோஹ்லி பீல்டிங் தேர்வு செய்தார்.

 RCB slump to 7th loss of the season, knocked out of the tournament

தொடர்ந்து களமிறங்கிய புனே அணியின் தொடக்க வீரர் ரஹானே 6 ரன்களில் ஏமாற்றினார். திரிபாதி 37, ஸ்மித் 45, மனோஜ் திவார் 44, டோணி 21 ரன்கள் எடுத்து அசத்தினர். இதனால் நிர்ணிக்கப்பட்ட 20 ஓவரில் புனே அணி 3 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது.

இதன் பின்னர் 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், 20 ஓவா்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 96 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் 61 ரன்கள் வித்தியாசத்தில் புனே அணி வெற்றி பெற்றது. கேப்டன் விராட் கோஹ்லி மட்டும் 55 ரன்கள் எடுத்தார்.

டிராவிஸ் ஹெட் 2, டி வில்லியர்ஸ் 3, கேதார் ஜாதவ் 7, சச்சின் பேபி 2, ஸ்டூவர்ட் பின்னி 1, நெகி 3, மில்னே 5, பத்ரி 2 என ஒற்றை இலக்க ரன்கள் எடுத்து அவுட்டாகினர். கடைசியில் அரவிந்த் 8, சஹால் 4 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ஏற்கெனவே கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் படுதோல்வி அடைந்த பெங்களூர் இன்றைய போட்டியிலும் படுதோல்வியை சந்தித்துள்ளது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இனி வரும் 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றாலும் கூட பிளே ஆப் சுற்றுக்கு பெங்களூர் முன்னேற முடியுமா? என்ற சூழல் உள்ளது. இருப்பினும் மீதமுள்ள போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது பெங்களூர் அணி.

Story first published: Sunday, April 30, 2017, 2:46 [IST]
Other articles published on Apr 30, 2017
English summary
Lockie Ferguson and Imran Tahir brilliant bowling helped Rising Pune Supergiant (RPS) beat Royal Challengers Bangalore by 61 runs in the match 34 of IPL 2017.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X