For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

21ம் நூற்றாண்டின் சிறந்த பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர்...அதிக வாக்குகளை வழங்கிய ரசிகர்கள்…

சிட்னி : 21-ம் நூற்றாண்டின் சிறந்த பேட்ஸ்மேனாக சச்சின்டெண்டுல்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கிரிக்கெட் ஆஸ்திரேலியா இணையதளம் நடத்திய வாக்கெடுப்பில் 21-ம் நூற்றாண்டின் சிறந்த டெஸ்ட் வீரர்களில் சச்சின் டெண்டுல்கர் அதிக வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்தார்.

2000-ம் ஆண்டு முதல் 100 டெஸ்ட் வீரர்களை பட்டியலிட்டு கிரிக்கெட் டாட் காம் டாட் ஏயு என்ற இணையதளம் வாக்கெடுப்பு நடத்தியது. இதில் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தையும் சங்கக்காரா 2-வது இடத்தையும் பிடித்தனர்.

Sachin Tendulkar Voted best player of 21st century' on Cricket Australia Website

இந்த வாக்கெடுப்பில் சுமார் 16,000-த்திற்கும் மேற்பட்ட கிரிக்கெட் ரசிகர்கள் பங்கேற்றனர். மொத்த வாக்கெடுப்பில் 23% வாக்குகளை அள்ளிய சச்சின் முதலிடம் பிடித்தார். சங்கக்காரா 14% வாக்குகளைப் பெற்று 2-ம் இடம் பிடித்தார்.

டாப்-100 டெஸ்ட் வீரர்கள் பட்டியலில் இந்தியா சார்பாக சச்சின் பெயர் மட்டுமே இடம்பெற்றுள்ளது. டாப்-10-ல் 4 ஆஸ்திரேலிய வீரர்கள், 3 தென் ஆப்பிரிக்க வீரர்கள் 2 இலங்கை வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்தப் பட்டியலில் கிரிக்கெட் டாட் காம் டாட் ஏயு சச்சினை வைத்திருந்த இடத்திலிருந்து அவர் 4 இடங்கள் முன்னேறி வாக்கெடுப்பின் மூலம் முதலிடம் பிடித்தார். ரிக்கி பாண்டிங், ஜாக் காலிஸ், ஆடம் கில்கிறிஸ்ட் ஆகியோரை பின்னுக்குத் தள்ளினார் சச்சின்.

டாப் 10 பட்டியல்:

1. சச்சின் டெண்டுல்கர்

2. குமார் சங்கக்காரா

3. ஆடம் கில்கிறிஸ்ட்

4. ரிக்கி பாண்டிங்

5. ஜாக்ஸ் காலிஸ்

6. ஏ.பி.டிவில்லியர்ஸ்

7. ஷேன் வார்ன்

8. கிளென் மெக்ராத்

9. முத்தையா முரளிதரன்

10. டேல் ஸ்டெய்ன்

Story first published: Friday, June 26, 2015, 8:33 [IST]
Other articles published on Jun 26, 2015
English summary
Sachin Tendulkar, who retired from international cricket in 2013 after playing his 200th Test, is the lone Indian player to be figuring in the top-10 list, while there are four Australian, three South African and two Sri Lankan cricketers.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X