For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக, தொடர்ந்து 4 சதங்கள் அடித்து சங்ககாரா உலக சாதனை!

By Veera Kumar

ஹோபர்ட்: ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றிலேயே முதல் முறையாக, தொடர்ச்சியாக 4 போட்டிகளில் சதம் அடித்து, புது உலக சாதனை படைத்துள்ளார், இலங்கையின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் குமார் சங்ககாரா.

உலக கோப்பையில், இன்று இலங்கையும், ஸ்காட்லாந்தும் மோதின. முதலில் பேட்டிங் செய்த இலங்கை, அபார ரன் குவிப்பில் ஈடுபட்டது. இலங்கையின் குமார் சங்ககாரா இந்த போட்டியில் சதம் அடித்து அசத்தினார்.

நாலாவது சதம்

நாலாவது சதம்

உலக கோப்பை தொடரில் அவர், பதிவு செய்யும் தொடர்ச்சியான 4வது சதம் இதுவாகும். முன்னதாக, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 3 நாடுகளுக்கு எதிராக தொடர்ச்சியாக, சங்ககாரா சதம் அடித்திருந்தார்.

முதல் வீரர்

முதல் வீரர்

இன்றைய போட்டியில் அவர் பதிவு செய்த சதத்தின்மூலம், ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ந்து 4 சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.

முச்சத சாதனையாளர்கள்

முச்சத சாதனையாளர்கள்

முன்னதாக, நியூசிலாந்தின் ரோஸ் டைலர், தென் ஆப்பிரிக்காவின், ஹர்ஷல் கிப்ஸ், டிவில்லியர்ஸ், டி காக், பாகிஸ்தானின் சையது அன்வர், ஜாகீர் அப்பாஸ் ஆகியோர், தொடர்ச்சியாக 3 சதங்கள் அடித்து சாதனை படைத்திருந்தனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அந்த முச்சத சாதனையை சமன் செய்த சங்ககாரா, தற்போது புதிய சாதனையை படைத்துள்ளார்.

சச்சினுக்கு மேலே

சச்சினுக்கு மேலே

சச்சின் அடுத்தடுத்து 2 சதங்கள் விளாசியுள்ளாரே தவிர, ஹாட்ரிக் சதம் இதுவரை அடித்ததில்லை. அந்த வகையில் சச்சினைவிட இரு மடங்கு பாய்ந்துள்ளார் சங்ககாரா.

வரலாற்றில் முதல் முறை

வரலாற்றில் முதல் முறை

இதுவரை 3 ஆயிரத்து 631 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் விளையாடப்பட்டுள்ளன. அதில் நிகழாத ஒரு சாதனை இன்று நிகழ்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, March 11, 2015, 11:45 [IST]
Other articles published on Mar 11, 2015
English summary
In the history of 3,631 ODIs before today, no batsman had scored 4 successive centuries. But on Wednesday, Sangakkara became the first ever batsman to achieve the feat.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X