For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பாகிஸ்தானில் விளையாட வந்த வங்கதேச பெண்கள் கிரிக்கெட் அணி - உச்சகட்ட பாதுகாப்பு

கராச்சி: பாகிஸ்தானில் வங்களதேச பெண்கள் கிரிக்கெட் அணி விளையாட வந்துள்ளது. இதையடுத்து அங்கு எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் அணி சுற்றுப் பயணம் செய்தபோது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். அதன்பின் எந்தவொரு அணியும் பாகிஸ்தான் சென்று விளையாட சம்மதம் தெரிவிக்கவில்லை.

Security on alert as Pakistan, Bangladesh women cricket teams kick off series

சமீபத்தில் ஜிம்பாப்வே அணி பாகிஸ்தான் சென்று விளையாடி இருந்தது. இந்நிலையில் தற்போது வங்கதேச பெண்கள் அணி பாகிஸ்தான் சென்று விளையாட இருக்கிறது.

இந்தப் போட்டித் தொடரில் வங்கதேசம் கலந்து கொள்ள வங்கதேச விளையாட்டுத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியதால் இந்தப் போட்டித் தொடர் தொடங்கியுள்ளது. இரு அணிகளும் 2 ஒரு நாள் போட்டிகளிலும், 2 டுவென்டி 20 போட்டிகளிலும் ஆடுகின்றன. நான்கு போட்டிகளும் கராச்சியில் நடைபெறுகிறது.

இதில் செப்டம்பர் 28ம் தேதி நடந்த முதல் டுவென்டி 20 போட்டியில் பாகிஸ்தான் அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முன்னதாக வங்காக தேச பெண்கள் அணிக்கு வி.வி.ஐ.பி. பாதுகாப்பு கொடுக்கப்படும் என்று வங்காள தேச கிரிக்கெட் வாரியத் தலைவர் நஸ்முல் ஹசன் தெரிவித்திருந்தார். இதனையடுத்து கடும் பாதுகாப்புடன் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகின்றது.

Story first published: Thursday, October 1, 2015, 14:02 [IST]
Other articles published on Oct 1, 2015
English summary
Tight security was in place as visiting Bangladesh women's cricket squad played the first T20 international against host Pakistan, which Pakistan won by 28 runs, kicking off a series in Karachi.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X