For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

2 ஆல் ரவுண்டர்கள், 7 பேட்ஸ்மென், 9 பவுலர்கள்.. வெஸ்ட் இண்டீஸைக் கலக்கக் கிளம்பும் இந்திய அணி!

மும்பை: மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் பவுர்கள் அதிகம் உள்ளனர். ஆல் ரவுண்டர்கள் வரிசையில் 2 பேர் இடம் பெற்றுள்ளனர்.

விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி அடுத்து வரும் மாதங்களில் மொத்தமாக 17 டெஸ்ட் போட்டிகளில் ஆடவுள்ளது. முதலில் மேற்கு இந்தியத் தீவுகளுக்குச் சென்று அங்கு டெஸ்ட் தொடரில் ஆடவுள்ளது.

முதலில் ஜூலை மாதம் மேற்கு இந்தியத் தீவுகளுக்குச் செல்கிறது இந்தியா. அங்கு நான்கு டெஸ்ட் போட்டிகளில் இந்தியா ஆடவுள்ளது. அதற்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இந்திய அணியின் சில முக்கிய அம்சங்களை இங்கு பார்க்கலாம்.

  • 17 பேர் கொண்ட இந்திய அணியை சந்தீப் பாட்டீல் தலைமையிலான தேர்வுக் குழு அறிவித்துள்ளது.
  • இந்த அணியின் துணை கேப்டனாக அஜிங்கியா ரஹானே இருப்பார்.
  • மகாராஷ்டிராவைச் சேர்ந்த சர்துல் தாக்கூர் புதுமுக வீரராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
  • சர்துல் தாக்கூர், 2015-16 ரஞ்சி சீசனில் அதிக விக்கெட் (41) வீழ்த்திய மும்பை வீரர் ஆவார்.
  • ஐபிஎல் போட்டிகளில் கலக்கிய லோகேஷ் ராகுலுக்கும் அணியில் இடம் கிடைத்துள்ளது. ராகுலுக்கு கோஹ்லி ஆதரவு என்று கூறப்படுகிறது.
  • இந்திய வீரர்களில் 7 பேர் பேட்ஸ்மென்கள். 9 பேர் பவுலர்கள். 3 பேர் ஆல் ரவுண்டர்கள்.
  • பந்து வீச்சாளர்களில் 4 பேர் வேகப் பந்து வீச்சாளர்கள் ஆவர், 3 பேர் சுழற்பந்து வீச்சாளர்கள்.
  • ஸ்டூவர்ட் பின்னி, சர்துல் தாக்கூர் ஆகியோர் ஆல்ரவுண்டர்கள் ஆவர்.
Story first published: Monday, May 23, 2016, 17:35 [IST]
Other articles published on May 23, 2016
English summary
Virat Kohli and other regular players were today (May 23) not picked for India's limited overs tour to Zimbabwe next month (June 11-22). Mahendra Singh Dhoni was retained as captain of the squad which has many new faces.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X