For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இதற்குத்தான் ஆசைப்பட்டாயா பாலகுமாரா.. ஷிகர் தவானை வறுக்கும் ரசிகர்கள்!

கொல்கத்தா: கம்பீரை தவிர்த்து விட்டு ஷிகர் தவானை கேப்டன் கோஹ்லி, 2வது டெஸ்ட் போட்டியில் சேர்த்தார். ஆனால் தவான் பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்து விட்டார். வெறும் ஒரு ரன்னில் அவர் அவுட்டானது ரசிகர்களை கடுப்பாக்கி விட்டது.

தவான் சொற்ப ரன்களில் அவுட்டானதைத் தொடர்ந்து பலரும் டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தவான போட்டு வறுத்தெடுத்து வருகின்றனர்.

2வது டெஸ்ட் போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக யார் இடம் பெறுவார், கம்பீரா அல்லது தவானா என்ற விவாதம் இருந்த நிலையில் கோஹ்லி, தவானை தேர்வு செய்து களம் இறக்கினார். ஆனால் அவரோ 10 பந்துகளை மட்டுமே சந்தித்து ஒரு ரன்னுடன் வெளியேறி விட்டார்.

நல்ல சான்ஸை விட்டு விட்டார்

நல்ல சான்ஸை விட்டு விட்டார்

தொடக்க ஆட்டக்காரர்களுக்கு கடும் போட்டி நிலவும் சூழலில் தனக்குக் கிடைத்த நல்ல வாய்ப்பை தவான் தவற விட்டு விட்டதாகவே பலரும் கூறுகிறார்கள். சற்று பொறுமையாக தவான் ஆடியிருக்க வேண்டும் என்பது பலரின் கருத்தாகும்.

உள்ளூரில் சரியில்லை

உள்ளூரில் சரியில்லை

ஷிகர் தவான் உள்ளூரிர் சமீப காலமாக சரியாக ஆடாமல் இருக்கிறார். கடந்த 11 இன்னிங்ஸ்களில் அவர் மொத்தமே 207 ரன்கள்தான் எடுத்துள்ளார்.அதில் அதிகபட்ச ரன் 45 மட்டுமே. தற்போது தவானை பலரும் டிவிட்டரில் விமர்சித்து வருகின்றனர்.

சர்ஜிகல் அட்டாக்!

பிரசாத் என்பவர் போட்டுள்ள டிவிட்டில் இது ஷிகர் தவானுக்கு சர்ஜிகல் அட்டாக் போல. வந்தார். வீழ்ந்தார் என்று கூறியுள்ளார்.

டோணி படம் பார்க்க ஓடிட்டார்

விவேக் சர்மா என்பவர் போட்டுள்ள டிவிட்டில், டோணியின் ரசிகர் ஷிகர் தவான். அதான் சீக்கிரமே அவுட்டாகி விட்டார். இதனால் டோணி படத்தை வேகமாக போய் பார்க்கலாம் என நினைத்து விட்டார் போல என்று கூறி கிண்டலடித்துள்ளார்.

வேஸ்ட்

ரோஹித் தன்வார் என்பவர் போட்டுள்ள டிவிட்டில், தனக்குக் கிடைத்த வாய்ப்பை மட்டுல்ல கம்பீருக்குக் கிடைக்கவிருந்த வாய்ப்பையும் வேஸ்ட் ஆக்கி விட்டார் தவான் என்று கூறியுள்ளார்.

இது கம்பீர் ரியாக்ஷனாம்!

ஷிகர் தவான் அவுட்டானதைத் தொடர்ந்து கம்பீர் காட்டிய ரியாக்ஷனாம் இது!

Story first published: Friday, September 30, 2016, 11:25 [IST]
Other articles published on Sep 30, 2016
English summary
Opener Shikhar Dhawan was given preference over veteran Gautam Gambhir in the second Test match against New Zealand at Kolkata, but the left-handed batter failed to capitalise over the chance.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X