For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பார்க்கத்தான் தென்றல்.. பேட்டிங் புயலாக மாறி மிரட்டிய ஸ்மிருதி மந்தனா!

லண்டன்: இங்கிலாந்து பவுலர்கள் இன்று ஸ்மிருதி மந்தனா சிக்கி சின்னாபின்னமாகி விட்டார்கள். அடி என்றால் அப்படி ஒரு அடி. இங்கிலாந்து பவுலிங்கை ச்சும்மா வெளுத்து வாங்கி விட்டார் ஸ்மிருதி.

பிரமாதமான பேட்டிங் என்று சொல்வதெல்லாம் படு சாதாரண வார்த்தை. பிரமிக்க வைத்த பேட்டிங் இன்று ஸ்மிருதி வெளிப்படுத்தியது. அவரது ஒவ்வொரு ரன்னிலும் தன்னம்பிக்கையும், ஆணித்தரமும் பட்டுத் தெறித்தது.

சர்வதேச அரங்கில் தன்னம்பிக்கை இல்லாவிட்டால் ஜொலிக்க முடியாது என்று நேற்றுதான் கூறியிருந்தார் மந்தனா. இன்று சொன்னபடி செய்து காட்டி விட்டார். அபாரமான பேட்டிங் திறமையை வெளிப்படுத்திய அவரது ஆட்டத்தில் ஸ்டைல் இருந்தது, டெக்னிக் இருந்தது, பொறுப்பும் இருந்தது.

வாவ் பேட்டிங்

வாவ் பேட்டிங்

அவரும் பூனம் ராத்தும் இணைந்து பேட் செய்த விதம் வாவ் போட வைத்து விட்டது. இங்கிலாந்து பவுலர்களால் இந்த இணையைப் பிரிக்க முடியவில்லை. அப்படி ஒரு அதகளம்.

ஓபனிங் தூண்

ஓபனிங் தூண்

மும்பையைச் சேர்ந்தவர் ஸ்மிருதி. இடது கை பேட்ஸ்வுமன் மற்றும் வலது ஆப் பிரேக் ஸ்பின்னரும் கூட. அருமையான பேட்ஸ்வுமன். அணியின் முக்கியத் தூண்களில் இவரும் ஒருவர். கடந்த ஆண்டு வலிமையான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆஸ்திரேலிய மண்ணில் வைத்து சதம் போட்டு அசரடித்தவர் ஸ்மிருதி.

முதல் போட்டியிலேயே மிரட்டல்

முதல் போட்டியிலேயே மிரட்டல்

இது ஸ்மிருதிக்கு முதல் உலகக் கோப்பை. முதல் உலகக் கோப்பைப் போட்டியிலேயே பேட்டிங்கில் மிரட்டி விட்டார் ஸ்மிருதி. சதத்தை நோக்கி புலியென பாய்ந்தாலும் 90 ரன்களில் அவரது இன்னிங்ஸ் முடிந்தது நமக்கு ஏமாற்றம்தான். நேற்று தனது முதல் உலகக் கோப்பைப் போட்டி குறித்து ஸ்மிருதி செய்தியாளர்களிடம் பேசுகையில், எல்லோருக்கும் இலக்கு இருக்கும். லட்சியம் இருக்கும். எனக்கும் உண்டு.

தன்னம்பிக்கை முக்கியம் பாஸ்

தன்னம்பிக்கை முக்கியம் பாஸ்

இந்தியாவுக்காக ஆட வேண்டும் என்பதுதான் அது. அது நிறைவேறி விட்டது. எனக்கு எப்போதுமே தன்னம்பிக்கை அதிகம். அதனால் ஏமாற்றம் குறைவு. சர்வதேச அரங்கில் ஜொலிக்க வேண்டும் என்றால் தன்னம்பிக்கை அவசியம் என்றார் ஸ்மிருதி.

Story first published: Saturday, June 24, 2017, 17:15 [IST]
Other articles published on Jun 24, 2017
English summary
Smriti Mandhana's Debut in the Women's cricket World cup was amazing as she slammed a brisky 90 runs in the opening match against England.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X