For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளரா? சௌரவ் கங்குலி சொல்வதை கேளுங்க!

By Mayura Akilan

கொல்கத்தா: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியின் 43வது பிறந்த நாளை அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர். கங்குலியின் வீட்டில் பூங்கொத்துக்களுடன் ரசிகர்கள் குவிந்தனர். ரசிகர் ஒருவர், கங்குலி போன்ற 3 டி சிலை ஒன்றை வடிவமைத்து பரிசாக வழங்கினார்.

Sourav Ganguly recieves a special gift on his 43rd birthday!

ரசிகர்கள் முன்னிலையில் கேக் வெட்டிய கங்குலி, சிலையை திறந்து வைத்து உற்சாகமாக புகைப்படம் எடுத்துக்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இது அருமையான சிலை, இது ரசிகர் எனக்களித்த இரண்டாவது சிலை என்றார். இந்த சிலையை எனது வீட்டில் வைக்க நல்ல இடத்தை தேடிக்கொண்டிருக்கிறேன் என்றும் கூறினார். தொடர்ந்து ரசிகர்கள் புகைப்பட ஆல்பங்கள், ஓவியங்களை கங்குலிக்கு பரிசளித்தனர்.

கிரிக்கெட் அணி பயிற்சியாளர்

இது தனக்கு ஒரு சாதாரண பிறந்தநாள்தான் எனவே பிறந்தநாள் சபதம் என்று எதுவும் எடுக்கவில்லை என்று கூறிய கங்குலி, இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்படுவேனா என்பது பற்றி எதுவும் தமக்கு எதுவும் தெரியாது என்றார்.

தலைசிறந்த பேட்ஸ்மேன்

டுவிட்டர் மூலம் கங்குலிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிசிசிஐ, "ஹேப்பி பர்த் டே தாதா. இந்த பிறந்த நாள் இனியதாக அமையட்டும்" என குறிப்பிட்டுள்ளது. 21-ம் நூற்றாண்டின் தலைசிறந்த பேட்ஸ் மேன்களில் ஒருவரான கங்குலிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் என ஐசிசி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Story first published: Thursday, July 9, 2015, 17:08 [IST]
Other articles published on Jul 9, 2015
English summary
Former Indian captain Sourav Ganguly celebrated his 43rd birthday in an unprecedented way by unveiling his 3D printed sculpture.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X