For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கங்குலியின் கனவு அணியில் கும்ப்ளேவுக்கு இடமில்லை.. என்ன கொடுமை சார் இது?!

பெங்களூரு: முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி வெளியிட்டுள்ள ஆல் டைம் லெவன் கனவு அணியில் இந்தியாவின் முன்னணி பந்து வீச்சாளராக திகழ்ந்தவரும், தற்போதைய இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளருமான அனில் கும்ப்ளேவுக்கு இடம் இல்லை.

ஆளாளுக்கு இப்போது கனவு அணிகளை அறிவித்து வருகிறார்கள். அந்த வரிசையில் கங்குலியும் ஒரு ஆல் டைம் லெவன் அணியை அறிவித்துள்ளார். அதில் இந்தியர்கள் 2 பேர் மட்டுமே இடம் பிடித்துள்ளனர்.

நிறைய ஆஸ்திரேலிய வீரர்கள் இதில் இடம் பிடித்துள்ளனர். இந்த அணியில் கும்ப்ளேவுக்கு இடம் தரவில்லை கங்குலி. கொடுத்தால் சாஸ்திரி திட்டக் கூடும் என்ற பயத்தில் கொடுக்காமல் விட்டாரா என்று தெரியவில்லை.

ஓப்பனிங் வீரர்கள்

ஓப்பனிங் வீரர்கள்

ஆஸ்திரேலிய ஜாம்பவான் மாத்யூ ஹெய்டன் மற்றும் இங்கிலாந்தின் அலிஸ்டைல் குக் ஆகியோர்தான் கங்குலி அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஆவர்.

3வது வீரர் டிராவிட்

3வது வீரர் டிராவிட்

3வது இடத்திற்கு டிராவிட் வருகிறார். அவருக்கு அடுத்த இடம்தான் சச்சின் டெண்டுல்கருக்கு கிடைத்துள்ளது கங்குலியின் கனவு அணியில்.

கேப்டன் ரிக்கி பான்டிங்

கேப்டன் ரிக்கி பான்டிங்

கங்குலி அணியின் கேப்டனாக ரிக்கி பான்டிங் அறிவிக்கப்பட்டுள்ளார். இலங்கை அணியின் குமார சங்கக்கராதான் விக்கெட் கீப்பர். இருப்பினும் ரிக்கி பான்டிங்குக்குக 7வது நிலையைத்தான் கொடுத்துள்ளார் கங்குலி.

2 ஸ்பின்னர்கள்

2 ஸ்பின்னர்கள்

கங்குலி அணியில் 2 தரமான ஸ்பின்னர்கள் இடம் பிடித்துள்ளனர். வேறு யார், ஷான் வார்னேவும் முத்தையா முரளிதரனும்தான். கும்ப்ளேவே இந்தப் பட்டியலில் கங்குலி சேர்க்கவில்லை.

ரிச்சர்ட்ஸ் இல்லை - லாரா இல்லை

ரிச்சர்ட்ஸ் இல்லை - லாரா இல்லை

இந்த அணியில் மேற்கு இந்தியத் தீவுகள் ஜாம்பவான்களான விவியன் ரிச்சர்ட்ஸ், பிரையன் லாரா ஆகியோருக்கும் இடம் தரவில்லை கங்குலி.

வேகத்திற்கு மெக்கிராத் - ஸ்டெய்ன்

வேகத்திற்கு மெக்கிராத் - ஸ்டெய்ன்

வேகப் பந்து வீச்சாளர்கள் வரிசையில் கிளன் மெக்கிராத், டேல் ஸ்டெயின் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இந்திய வேகப் பந்து வீச்சாளர்கள் யாரையும் கண்டு கொள்ளவில்லை கங்குலி.

ஒரே ஒரு ஆல் ரவுண்டர்

ஒரே ஒரு ஆல் ரவுண்டர்

கங்குலி அணியில் இடம் பெற்றுள்ள ஒரே ஆல் ரவுண்டர் தென் ஆப்பிரிக்காவின் ஜேக்கஸ் காலிஸ் மட்டுமே. இதுதான் கங்குலியின் கனவு அணி.

இதுதான் அணி

மாத்யூ ஹெய்டன் (ஆஸி.), குக் (இங்கிலாந்து), ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், காலிஸ் (தெ. ஆப்பிரிக்கா), குமார சங்கக்கரா (இலங்கை), ரிக்கி பான்டிங் (கேப்டன் - ஆஸி), மெக்கிராத் (ஆஸி), ஸ்டெயின் (தெ. ஆப்பிரிக்கா), வார்னே (ஆஸி.), முரளிதரன் (இலங்கை).

Story first published: Friday, August 5, 2016, 10:53 [IST]
Other articles published on Aug 5, 2016
English summary
Former captain Sourav Ganguly today (August 4) picked his All-Time XI dominated by Australians. There are 2 Indian legends in the team. In a video posted on Lord's Cricket Ground's official Twitter handle on Thursday, Ganguly made his 11 choices for his all-time team. (Brendon McCullum's all-time XI).
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X