For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டோணி இதற்கு சரிபட்டு வரமாட்டாரு.. தலயை கைவிட்ட தாதா!

டி20 கிரிக்கெட்டை பொறுத்தளவில் கடந்த 10 ஆண்டுகளில் டோணி ஒருமுறை மட்டுமே அரை சதம் கடந்துள்ளார். இது சிறப்பான சாதனை இல்லை என்று கங்குலி ஒரு ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

By Veera Kumar

கொல்கத்தா: மகேந்திர சிங் டோணி ஒரு நல்ல டி20 வீரராக தொடர முடியாது என்ற சந்தேகம் தனக்கு வந்துவிட்டதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மற்றும் நடப்பு ஐபிஎல் தொடரில் ரைசிங் புனே சூப்பர் ஜியான்ட் அணிக்காக ஆடி வருகிறார் டோணி. இம்முறை கேப்டன் பொறுப்பின்றி டோணி ஆடுவதால் அவர் விளாசுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் டோணியின் நடப்பாண்டு ஐபிஎல் ஸ்ட்ரைக் ரேட் சராசரி 65 என்ற விகிதத்தில் உள்ளது. 10 பந்துகளை சந்தித்தால் அதில் 7க்கும் குறைவாகவே ரன் சேகரிக்க முடியும் என்ற நிலையில் உள்ளார் டோணி.

கங்குலி காட்டம்

கங்குலி காட்டம்

இதுகுறித்த சர்ச்சைகள் வெடித்துள்ள நிலையில், முன்னாள் கேப்டனும், டோணியின் ஆதரவு பேட்டிகளை இதற்கு முன்பு பல நேரங்களில் கொடுத்தவருமான சவுரவ் கங்குலி இம்முறை, டோணியை கைவிட்டுவிடும் அளவுக்கான பேட்டியை கொடுத்துள்ளார்.

சரிபடமாட்டார்

சரிபடமாட்டார்

கங்குலி கூறுகையில், டோணி ஒரு சாம்பியன் ஒருநாள் கிரிக்கெட் வீரர். ஆனால் டி20 போட்டிகளுக்கு டோணி இனியும் சமர்த்தரா என்பதில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர் இந்த வகை போட்டிகளுக்கு சரிபட்டு வரமாட்டார் என்றே நினைக்கிறேன்.

ஒரே அரைசதம்

ஒரே அரைசதம்

டி20 கிரிக்கெட்டை பொறுத்தளவில் கடந்த 10 ஆண்டுகளில் டோணி ஒருமுறை மட்டுமே அரை சதம் கடந்துள்ளார். இது சிறப்பான சாதனை இல்லை என்று கங்குலி ஒரு ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

[Read This: சோனமுத்தா போச்சா..? ஐபிஎல் தொடரில் டெஸ்ட் மேட்ச் ஆடும் டோணி.. ஃபேர்வெல் கொடுக்க ரெடியாகிறது புனே ]

அணியிலிருந்து கல்தா

அணியிலிருந்து கல்தா

நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியில் டோணி இடம்பெற வேண்டுமா என்பது தெரியவில்லை. அவர் சிறப்பாக டி20 போட்டிகளில் ரன் சேகரித்தால்தான் அதற்கான அவசியம் எழும் என்றார் கங்குலி.

கிளாக்கும் விமர்சனம்

கிளாக்கும் விமர்சனம்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மிட்சேல் கிளார்க் இதேபோன்ற ராகத்தை பாடியுள்ளார். டோணி கண்டிப்பாக ரன் சேகரித்தே ஆக வேண்டும். தொழில்முறை கிரிக்கெட் வீரராக இருக்கும் அவர் இதை செய்யத்தான் வேண்டும் என்று கூறியுள்ளார் கிளார்க். பல முனைகளில் இருந்தும் டோணியின் ரன் சேகரிப்பு திறமை மீது சமீபகாலமாக தாக்குதல்கள் அதிகரித்துள்ளது.

Story first published: Thursday, April 13, 2017, 16:08 [IST]
Other articles published on Apr 13, 2017
English summary
The former India captain Sourav Ganguly on Wednesday said Dhoni is not a good T20 player.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X