For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

திகார் சிறையில் இருந்த போது தற்கொலை செய்துகொள்ள நினைத்தேன்.. ஸ்ரீசாந்த்

By Mathi

டெல்லி: ஐ.பி.எல். பிக்ஸிங் வழக்கில் தாம் திகார் சிறையில் இருந்த போது தற்கொலை செய்துகொள்ள நினைத்தேன்; தற்போது வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து வாழ்நாள் தடையை இந்திய கிரிக்கெட் வாரியம் நீக்கும் என்று ஸ்ரீசாந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலர் அனுராக் தாக்கூரை சந்திப்பதற்காக அனுமதி கோரியுள்ளேன். என் மீதான வாழ்நாள் தடையை நீக்குமாறு கோரி நான் விண்ணப்பிக்கலாம் என்று அவர் தொலைக்காட்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Sreesanth hoping for ban to be lifted, says he's waiting for BCCI secretary's call

இதனால் வாழ்நாள் தடையை நீக்க வேண்டும் என்ற எனது கோரிக்கை ஏற்கப்படும் என்று நம்புகிறேன். எனவே அதற்காக விண்ணப்பிக்க உள்ளேன்.

பிக்ஸிங் விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட திகார் சிறையில் இருந்த போது நான் தற்கொலை செய்வது குறித்தெல்லாம் நான் சிந்தித்தது உண்டு. எனது குடும்பம் மற்றும் கடவுளின் ஆதரவால் அந்த எண்ணத்தை கடந்து வந்தேன்.

இவ்வாறு ஸ்ரீசாந்த் கூறினார்.

Story first published: Wednesday, July 29, 2015, 11:51 [IST]
Other articles published on Jul 29, 2015
English summary
He contemplated "suicide" during his time at Tihar Jail but pacer S Sreesanth is now hoping to sing the redemption song and would approach the BCCI for lifting the life ban imposed on him from playing cricket by the Board.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X