For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

முரளி விஜயை கெட்ட வார்த்தையால் திட்டிய ஸ்மித்.. காமிராவில் வசமாக சிக்கினார்!

By Veera Kumar

தரம்சாலா: இந்திய வீரர் முரளி விஜயை, ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் கெட்ட வார்த்தையில் மோசமாக திட்டியது காமிராவில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. முதல் மூன்று டெஸ்டின் முடிவில் இரு அணிகளும் தலா 1 போட்டியில் வென்றன. ராஞ்சியில் நடந்த மூன்றாவது டெஸ்ட் டிராவில் முடிவடைந்தது.

இரு அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி தரம்சாலாவில் நடந்தது. இப்போட்டியின் 2வது இன்னிங்சில் ஆஸி. அணி வெறும் 137 ரன்களில் சுருண்டது.

கேட்ச் சர்ச்சை

கேட்ச் சர்ச்சை

அந்த இன்னிங்சில் ஆஸி. அணியன் கடைசி விக்கெட்டான ஹசில்வுட்டின் கேட்சை முரளி விஜய் பிடித்தார். அடுத்ததாக இந்தியா தனது முதல் இன்னிங்சில் பேட் செய்ய வேண்டும் என்பதால் முரளி விஜய் அவசரமாக பெவிலியன் நோக்கி ஓடினார். ஆனால் நடுவரோ இந்த கேட்சில் சந்தேகம் இருப்பதாக 3வது நடுவரிடம் விளக்கம் கேட்டார்.

கெட்ட வார்த்தை

கெட்ட வார்த்தை

3வது நடுவர் டிவி ரிப்ளேயில் பார்த்தபோது, கேட்ச் சரியாக பிடிக்கப்படவில்லை என்பதை கவனித்து நாட்-அவுட் என அறிவித்தார். இதையடுத்து ஹசில்வுட் பேட் செய்ய திரும்பினார். இதை பெவிலியனில் இருந்து டிவியில் பார்த்த ஆஸி. கேப்டன் ஸ்மித், தனது வாயை தவளை போல விரித்து, முரளி விஜையை பார்த்து "f****** cheat" என்று கூறினார். இது டிவி சேனல் கேமராவில் பதிவாகியுள்ளது. அவரது வாய் அசைவை வைத்து அந்த கெட்ட வார்த்தையை அவர் பேசியது என்ன என்பது அடிப்படை ஆங்கில அறிவு கொண்ட குழந்தையால் கூட கண்டுபிடிக்கும் அளவில் உள்ளது.

உடனே அவுட்

உடனே அவுட்

இந்த சர்ச்சைக்கு பிறகு 2 பந்துகளை மட்டுமே சந்தித்த ஹசில்வுட் மேற்கொண்டு ரன் எதுவும் சேர்க்காமலேயே அஸ்வின் பந்தில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். இதற்குள்ளாகத்தான் இத்தனை அக்கப்போர் நடந்து அரங்கேறிவிட்டது.

ஐசிசி நடவடிக்கை

ஸ்மித்துக்கு எதிராக ஐ.சி.சி. ஒழுங்கு நடவடிக்கை பாயலாம் என தெரிகிறது. இதுவரை இந்திய அணி சார்பாக இவர் மீது எந்த புகாரும் அளிக்கப்படவில்லை. போட்டிக்கு பின் தான் இவர் மீதான நடவடிக்கை குறித்து தெரியவரும். அதேபோல ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் வேட் மற்றும் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா இருவரும் மைதானத்திற்குள்ளேயே வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் சக வீரர்கள் அவர்களை பிரித்து விட்ட சம்பவமும் ஆஸ்திரேலியாவின் 2வது இன்னிங்சில் அரங்கேறியது.

தவளை போல கத்தலாமா

தவளை போல கத்தலாமா

தவளை போல வாயை வைத்து என்ன வேண்டுமானாலும் பேசலாம் என நினைத்த ஸ்மித்தின், வாயை, தர்மசாலாவில் இந்தியா பெற்றி அதிரடி வெற்றி உடைத்துவிட்டது என்றுதான் கூற வேண்டும். இப்போது தலையை தொங்க போட்டுக்கொண்டு, தாயகம் திரும்புகிறார் ஸ்மித்.

Story first published: Tuesday, March 28, 2017, 14:44 [IST]
Other articles published on Mar 28, 2017
English summary
Aussie skipper Steve Smith allegedly abusing Indian opener Murali Vijay.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X