For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மச்சி கூலா ஒரு பீர் சொல்லேன்.. ரஹானேவிடம் தானாக வந்து வழிந்த ஸ்மித்

By Veera Kumar

தரம்சாலா: இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் முடிவடைந்த நிலையில், இந்திய கேப்டன் ரஹானேவிடம் பீர் கிடைக்குமா என கேட்டுள்ளார் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்.

இந்தியா-ஆஸ்திரேலியா நடுவேயான நாலாவது டெஸ்ட் போட்டி தரம்சாலாவில் இன்று நிறைவடைந்தது. இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு, தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

இந்த தொடரில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் சிறப்பாக ஆடி மொத்தம் 499 ரன்களை குவித்தாலும், தேவையற்ற விஷயங்களுக்காகவே அவரது பெயர் அதிகம் அடிபட்டது.

டிஆர்எஸ் சர்ச்சை

டிஆர்எஸ் சர்ச்சை

டிஆர்எஸ் முடிவை எடுப்பதற்காக பெவிலியனை நோக்கி திரும்பி பார்த்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்திய வீரர் முரளி விஜயை கெட்ட வார்த்தையில் திட்டியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

புகார் வாபஸ்

புகார் வாபஸ்

டிஆர்எஸ் பிரச்சினையில் ஸ்மித் மீது புகார் கொடுத்திருந்த பிசிசிஐ பிறகு அதை வாபஸ் பெற்று நட்பை தொடர சிக்னல் கொடுத்தது. ஆனால் முரளி விஜய் குறித்த ஆபாச பேச்சு குறித்து இன்னும் புகார் அளிக்கப்படவில்லை.

பீர் குடிக்கலாமா

பீர் குடிக்கலாமா

4வது நாளான இன்றே ஆட்டம் முடிவடைந்துவிட்டதால் இரு அணி வீரர்களும் குளுமையான தரம்சாலாவிலேயே இன்று தங்கியுள்ளனர். இந்நிலையில் கடைசி டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணி கேப்டனாக செயல்பட்ட ரஹானேவிடம் அணுகிய ஸ்மித், உங்களோடு சேர்ந்து பீர் குடிக்க எங்கள் அணிக்கும் வாய்ப்பு கிடைக்குமா என கேட்டுள்ளார். இதை கேட்ட ரஹானே புன் சிரிப்புடன், கேட்டு சொல்கிறேன் என கூறினாராம்.

பத்திரிகையாளர் தகவல்

இதுகுறித்து ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் ஒருவரிடம் ஸ்மித் கூறியுள்ளார். அவர் இத்தகவலை டிவிட்டரில் வெளியிட்டதோடு செய்தியாக பதிவிட்டுள்ளார். இப்படித்தான் ஒரு கிரிக்கெட் தொடரை நட்போடு முடிக்க வேண்டும் எனவும் அந்த பத்திரிகையாளர் பாராட்டியுள்ளார்.

Story first published: Tuesday, March 28, 2017, 14:53 [IST]
Other articles published on Mar 28, 2017
English summary
Steve Smith asked Rahane if the Aussies can join India for a beer in the dressing rooms. The right way to end it.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X