For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அந்த வேலைக்கு டிராவிட்தான் சரிபட்டுவருவாரு.. கோரசாக சொல்லும் கவாஸ்கர், பாண்டிங்!

By Veera Kumar

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக தகுதியானவர் ராகுல் டிராவிட்தான் என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் மற்றும் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக பதவி வகித்த டன்கன் பிளட்சர் பதவி காலம் முடிந்துவிட்ட நிலையில், ராகுல் டிராவிட் அந்த பதவிக்கு தக்க நபராக இருப்பார் என்கிறார் கவாஸ்கர்.

ஆங்கில தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில் மேலும் அவர் கூறுகையில், எல்லா வீரர்களுக்குமே ஓய்வு முடிவை அறிவித்த பிறகு சில காலம் தனிமை தேவைப்படும். இப்போது ராகுல் டிராவிட் அந்த தனிமை காலத்தை தாண்டிவிட்டார்.

 கவாஸ்கர் கருத்து

கவாஸ்கர் கருத்து

இப்போது ராகுல் டிராவிட் புதிய பொறுப்பை ஏற்க தகுதியானவராகும். இந்திய அணிக்கு ராகுல் டிராவிட்டை விட வேறு சிறந்த பயிற்சியாளரை தேடுவது கஷ்டம் என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.

 வழிமொழிந்த பாண்டிங்

வழிமொழிந்த பாண்டிங்

இதையே ஆஸி. முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கும், தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணிக்கு திறமையான பயிற்சியாளராக விளங்க தகுதியானவர் ராகுல் டிராவிட் என்று பாண்டிங் தெரிவித்துள்ளார்.

அனுபவம்

அனுபவம்

டெஸ்ட், ஒன்டே, டி20 என்ற மூன்றுவகை கிரிக்கெட் போட்டிகளிலும் சிறப்பான பங்களிப்பை தந்தவர் டிராவிட், அவருக்கு கிரிக்கெட்டின் அனைத்து நுணுக்கங்களும் தெரியும் என்பதோடு, நல்ல அனுபவமும் உண்டு என்று பாண்டிங் தெரிவித்துள்ளார்.

 ஜூனியர் கோச்

ஜூனியர் கோச்

ராகுல் டிராவிட் தற்போது இந்திய 19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக உள்ளார். சமீபத்தில் நடந்த உலக கோப்பையில் இந்த அணி பைனல் வரை சென்று மே.இ.தீவுகள் அணியிடம் வெற்றி வாய்ப்பை இழந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, May 18, 2016, 15:48 [IST]
Other articles published on May 18, 2016
English summary
Batting legend Sunil Gavaskar has backed Rahul Dravid as the next Indian cricket team coach, saying if the BCCI was looking for a change, the former India captain is best suited for the job.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X