For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அடடே, இது ரொம்பப் பிரமாதமா இருக்கே...!

மெல்போர்ன்: உலகக் கோப்பைத் தொடரில் இந்தியா செய்யும் ஒவ்வொரு வேலையும் செம பிரமாதமாக இருக்கிறது. எது எடுத்தாலும் பத்து ரூபா என்பது போல இந்தியா எதைச் செய்தாலும் அது சாதனையாக அமைந்திருப்பது உண்மையிலேயே ஆச்சரியம்தான்.

நடப்பு உலகக் கோப்பைத் தொடரிலும் இந்தியா பல சாதனைகளைப் படைத்து வருகிறது. அதில் ஒன்றுதான் இது. இந்த சாதனையால்தான் அது தான் சந்தித்த அனைத்துப் போட்டிகளிலும் இதுவரை தோல்வியைச் சந்திக்காமல் உள்ளது தெளிவாகியுள்ளது.

எப்படியாவது விளையாடி வெல்ல வேண்டும் என்ற நியதியைப் பின்பற்றாமல் எப்படி ஆட வேண்டுமோ அப்படி ஆடி அழகாக அசத்தி வருகிறது இந்தியா.

7 போட்டிகள் பாக்கெட்டில்

7 போட்டிகள் பாக்கெட்டில்

இந்தியா நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் தொடர்ச்சியாக 7 போட்டிகளில் வென்றுள்ளது. இது ஒரு மிகப் பெரிய சாதனையாகும். இதுவரை உலகக் கோப்பை வரலாற்றில் எந்த அணியும் இப்படி தொடர்ந்து வென்றதில்லை.

காலிறுதியில் களேபர வெற்றி

காலிறுதியில் களேபர வெற்றி

மெல்போர்ன் மைதானத்தில் நேற்று நடந்த காலிறுதிப் போட்டியில் வங்கதேச அணியை 109 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலாக வென்றது இந்தியா.

காரணம்... பேட்டிங் பவர் பிளே!

காரணம்... பேட்டிங் பவர் பிளே!

இந்தியா தனது பேட்டிங் பலர் பிளேயை மிகச் சரியாக பயன்படுத்தி ரன் குவித்து வருவதே இந்தத் தொடர் வெற்றிகளுக்கு முக்கியக் காரணமாகும்.

7 போட்டிகளில் நோ விக்கெட்!

7 போட்டிகளில் நோ விக்கெட்!

இந்த 7 போட்டிகளிலும் பேட்டிங் பவர் பிளேயின்போது இந்தியா ஒருமுறை கூட ஒரு விக்கெட்டைக் கூட இழந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு ஆச்சரியகரமான, அற்புதமான விஷயமாகும்.

பிச்சுப்புடுவோம் பிச்சு

பிச்சுப்புடுவோம் பிச்சு

நேற்றைய ஆட்டத்திலும் கூட பேட்டிங் பவர் பிளேயின்போது 5 ஓவர்களில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 50 ரன்களைக் குவித்திருந்தது.

அதெல்லாம் அப்ப பாஸ்

அதெல்லாம் அப்ப பாஸ்

இதுகுறித்து கேப்டன் டோணியிடமே நேற்று செய்தியாளர்கள் கேட்டபோது, கடந்த காலங்களில் சில தவறுகள் நடந்திருக்கலாம். ஆனால் பேட்டிங் பவர் பிளேயை இப்போது நாங்கள் மிகச் சரியாக பயன்படுத்துகிறோம். அதை சிறப்பாக கையாளுவதாகவே கருதுகிறேன் என்றார்.

போனஸ்தான்

போனஸ்தான்

மேலும் அவர் கூறுகையில், அதற்காக இதை லாட்டரி என்று கூறி விட முடியாது. கூடுதலாக 50 ரன்கள் வரை எடுக்க இது பயன்படும். அவ்வளவுதான். மற்ற ஓவர்களில் நீங்கள் எடுக்கும் ரன்களும் மிக மிக அவசியம் என்றார் டோணி.

பாகிஸ்தானுக்கு எதிராக 25

பாகிஸ்தானுக்கு எதிராக 25

பாகிஸ்தானுக்கு எதிராக் நடந்த முதல் போட்டியில் இந்தியா தனது பேட்டிங் பவர் பிளேயின்போது 5 ஓவர்களில் (36-40) 25 ரன்களை எடுத்தது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியின்போது 44 ரன்களைக் குவித்திருந்தது.

எமிரேட்ஸுக்கு எதிராக 16

எமிரேட்ஸுக்கு எதிராக 16

எமிரேட்ஸ் அணிக்கு எதிரான போட்டியின்போது 17 -18.5 ஓவர்களில் இந்தியா 16 ரன்களை எடுத்திருந்தது. மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியின்போது 21 ரன்களைச் சேர்த்திருந்தது.

அயர்லாந்துக்கு எதிராக 32

அயர்லாந்துக்கு எதிராக 32

அயர்லாந்துக்கு எதிரான போட்டியின்போது (34 - 36.5) ஓவர்களில் 32 ரன்களைச் சேர்த்திருந்தது. ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியின்போது 39 ரன்களைக் குவித்திருந்தது.

வங்கதேசத்துக்குத்தான் செம ஆப்பு

வங்கதேசத்துக்குத்தான் செம ஆப்பு

வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில்தான் அதிக அளவில் ரன் குவித்தது இந்தியா. 36 முதல் 40 ஓவர்கள் வரையிலான சமயத்தில் அது 50 ரன்களைக் குவித்தது.

இது மட்டுமா...!

இது மட்டுமா...!

இது மட்டுமா இந்த 7 போட்டிகளிலும் இந்தியா அத்தனை அணிகளையும் ஆல் அவுட் ஆக்கி, 70 விக்கெட்களைப் பறித்து உலக சாதனையும் படைத்து அடுத்து ஒரு பெரிய வேட்டைக்குத் தயாராக காத்திருக்கிறது.

Story first published: Friday, March 20, 2015, 14:37 [IST]
Other articles published on Mar 20, 2015
English summary
India have mastered the art of playing the batting powerplays at the ICC World Cup 2015. This is one of the reasons for their unbeaten run so far. Yesterday (March 19), India extended their winning run to 7 matches to book a spot in the semi-finals where they face either Australia or Pakistan, on March 26.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X