For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரஞ்சி கோப்பையில் மகாராஷ்டிரா வீரர்கள் புது சாதனை! உலக சாதனை ஜஸ்ட் மிஸ்

By Veera Kumar

மும்பை: மகாராஷ்டிரா ரஞ்சி அணியின் ஸ்வப்னில் காகலே மற்றும் அங்கித் பவ்னே இருவரும், இணைந்து டெல்லி ரஞ்சி அணிக்கு எதிராக, 594 ரன்களை பார்ட்னர்ஷிப் மூலம் எடுத்து சாதனை படைத்துள்ளனர்.

அணியின் கேப்டனுமான ஸ்வப்னில் காகலே 351 ரன்களுடனும், பவ்னே 258 ரன்களுடனும் களத்தில் நின்றபோது ஆட்டத்தை டிக்ளேர் செய்து கொண்டனர். 2 விக்கெட் இழப்புக்கு 635 ரன்களை மகாராஷ்டிரா குவித்திருந்த நிலையில், கேப்டன் தனது சொந்த சாதனைகளை பார்க்காமல் அணி வெற்றிக்காக டிக்ளேர் செய்வதாக அறிவித்தார்.

Swapnil Gugale-Ankit Bawne set Ranji Trophy record with 594-run partnership

இந்திய அணியை பொறுத்தளவில் விஜய் ஹசாரே மற்றும் குல் முகமது ஆகியோர் இணைந்து 577 ரன்கள் குவித்ததே முந்தைய பெஸ்ட் சாதனை.

உலக அளவில், இலங்கையின் குமார் சங்ககாரா-மகிளா ஜெயவர்த்தனே இணை, 2006ல் கொழும்புவில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த டெஸ்டில் 624 ரன்களை குவித்தது உலக அளவிலான பெஸ்ட்டாக தொடருகிரது. 30 ரன்களில் அந்த சாதனையை மகாராஷ்டிரா ஜோடி தவறவிட்டுள்ளது.

Story first published: Friday, October 14, 2016, 18:09 [IST]
Other articles published on Oct 14, 2016
English summary
Maharashtra's Swapnil Gugale and Ankit Bawne rewrote record books and came very close to erasing Sri Lankan legends Mahela Jayawardene-Kumar Sangakkara's world mark in the Ranji Trophy match here today (October 14). Captain and opener Gugale struck a magnificent unbeaten 351 (521 balls, 37x4, 5x6) and number 4 batsman Bawne remained undefeated on a superb 258 (500 balls, 18x4, 2x6) against Delhi on the second day of their Ranji Trophy contest here at the Wankhede Stadium.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X