For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆஸ்திரேலிய மீடியாக்கள் கோஹ்லியை பற்றி என்ன சொல்கின்றன தெரியுமா?

By Veera Kumar

கான்பெரா: 51 பந்துகளில் அவுட்டாகாமல் 82 ரன்களை குவித்து ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின், செமி பைனலுக்குள் நுழைய காரணமாக இருந்த விராட் கோஹ்லியை வாயார பாராட்டுகிறார்கள் ஆஸ்திரேலிய பிரபலங்களும், மீடியாக்களும்.

உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் வாழ்வா-சாவா ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா நேற்று மொகாலியில் மோதின. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 160 ரன்களை குவித்தது.

2வது பேட் செய்த இந்திய அணி, 19.1 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. துணை கேப்டன் கோஹ்லி அதிகபட்சமாக 51 பந்துகளில் 82 ரன்கள் குவித்து அவுட்-ஆகாமல் களத்தில் நின்று அணியின் வெற்றிக்கு உதவினார்.

பஞ்சரான பாக்னர்

பஞ்சரான பாக்னர்

கடைசி 18 பந்துகளில் 39 ரன்கள் தேவை என்ற நிலையில், ஆஸ்திரேலியா கை ஓங்கியிருந்தபோது, பந்து வீச வந்த பால்க்னர் ஓவரை கிழி, கிழியென கிழித்த கோஹ்லி, கடைசி ஓவரில் 4 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலைக்கு ஆட்டத்தை கரைசேர்த்து கொண்டு வந்தார். மறுமுனையில் நின்ற டோணிக்கு வின்னிங் ஷாட் அடிக்க மட்டுமே வாய்ப்பு கிடைத்தது.

பாராட்டு மழை

பாராட்டு மழை

கோஹ்லியின் இந்த கடைசி நேர ஆட்டம்தான் ஆஸ்திரேலியாவிடமிருந்த வாய்ப்பை தட்டிப்பறித்து இந்தியா பக்கம் கொண்டு வந்தது. இந்த ஆட்டம் இந்திய ரசிகர்களால் மட்டுமின்றி ஆஸ்திரேலிய பிரபலங்களாலும் பாராட்டு பெற்றுள்ளது.

விராட் ஷோ

விராட் ஷோ

"ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், இந்த ஆட்டத்தை விராட் ஷோ என்று வர்ணித்தார். அவர் கூறியது சரிதான்" என்று தி சிட்னி மார்னிங் ஹெரால்ட் பத்திரிகையில், செய்தியாளர் கிறிஸ் பர்ரட் எழுதியுள்ளார்.

தனி நபர்

தனி நபர்

டி20 வரலாற்றின் சிறந்த போட்டிகளில் ஒன்றான, இப்போட்டியில், இந்தியாவின் பேட்டிங் மாஸ்டர், தனி நபராக ஆஸ்திரேலியாவை வீட்டுக்கு திருப்பி அனுப்பி வைத்துள்ளார்.. என்றும் சிட்னி மார்னிங் ஹெரால்ட் புகழ்ந்துள்ளது.

இவரை போன்றவர் இல்லை

இவரை போன்றவர் இல்லை

தி டெய்லி டெலிகிராப் பத்திரிகியின், பென் ஹோர்ன் கூறுகையில், 'ஒரு மனிதன் இதை வெற்றி கண்டான்' என்று கோஹ்லிக்கு புகழாரம் சூட்டியுள்ளார். "விராட் கோஹ்லி போன்ற திறமையான ஒரு கிரிக்கெட் உலக கிரிக்கெட் உலகில் தற்போதைக்கு யாருமே இல்லை, என்பதை கூறிக்கொள்வதில் எனக்கு சிரமம் இல்லை" என்றும் அவர் புகழ்ந்துள்ளார்.

நல்ல விரட்டல்

நல்ல விரட்டல்

கடினமான ஒரு ரன் விரட்டலை கோஹ்லி மிகவும் எளிமையாக்கிவிட்டார். வேகமாக ரன் குவித்ததை தவிர்த்து பார்த்தால், ஒரு டெஸ்ட் போட்டிக்குறிய சுவாரசியத்தோடு போட்டி அமைந்தது என்று, 'தி ஆஸ்திரேலியன்' பத்திரிகை புகழாரம் சூட்டியுள்ளது.

மகிழ்ச்சிதான்

மகிழ்ச்சிதான்

ஆஸ்திரேலியன் பிராட்காஸ்டிங் கார்பொரேசனில் எழுதியுள்ள ஜெப் லீமன், ஆஸ்திரேலியா உலக கோப்பையில் இருந்து வெளியேற்றப்பட்டது, வருத்தம்தான் எனினும், ஒரு சிறப்பான பேட்டிங் மூலமாக நாம் வெளியேற்றப்பட்டுள்ளோம் என்று கூறி, வருத்தத்திற்கு, பேட்டிங் அதிரடியால் மருந்து போட்டுள்ளார்.

வார்னே புகழாரம்

வார்னே புகழாரம்

"வாவ்.. விராட் கோஹ்லியிடமிருந்து ஒரு முழு கிளாஸ் ஆட்டம்" என்று வாயை பிளந்து பாராட்டியுள்ளார் ஆஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னே.

கிளாஸ்

கிளாஸ்

ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறுகையில், விராட் கோஹ்லியிடமிருந்து வெளியான ஒரு கிளாஸ் ஆட்டம் என்று தெரிவித்துள்ளார். இந்திய வீரர்கள் அஸ்வின், ரோகித் ஷர்மா, தவான் போன்றோரும், கோஹ்லியை வாழ்த்தி டிவிட் போட்டுள்ளனர்.

Story first published: Monday, March 28, 2016, 11:56 [IST]
Other articles published on Mar 28, 2016
English summary
Australian commentators were full of praise for Virat Kohli's thrilling batting on Monday, even though his heroic 82 sent Steve Smith's team crashing out of the World T20.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X