For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அதிக விக்கெட்களை வீழ்த்திய சாதனையாளர் கும்ப்ளே... கடந்து வந்த பாதை !

By Karthikeyan

மும்பை: அதிக விக்கெட்கள் வீழ்த்திய இந்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையுடன் வலம் வரும் அனில் கும்ப்ளே, இனி இந்திய அணியை வழிநடத்தி செல்லும் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள 45 வயதான அனில் கும்ப்ளே இந்திய அணிக்காக 18 ஆண்டுகள் விளையாடியுள்ளார். கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க தலைவராகவும் பதவி வகித்த அனில் கும்ப்ளே, 27 ஐபிஎல் போட்டிகளில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார். அர்ஜூனா மற்றும் பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளார்.

 The 45 year old Kumble, India's highest wicket take

முன்னாள் கேப்டன். ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்திய இந்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையை வைத்திருப்பவர் அனில் கும்ப்ளே. 132 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 619 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக டெஸ்ட் விக்கெட்டுகளுக்கான இந்தியச் சாதனையை வைத்துள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் 271 ஆட்டங்களில் 337 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார் கும்ப்ளே. பேட்டிங்கில் வெளிநாடு 2506 ரன்களை 110 என்ற அதிகபட்ச ஸ்கோருடன் எடுத்துள்ளார். ஒரு சதம் 5 அரைசதங்கள் அடங்கும்.

டெஸ்ட் போட்டிகளில் கும்ப்ளேயின் சிக்கன விகிதம் ஓவருக்கு 2.69 ரன்கள். டெஸ்ட் போட்டிகளில் ஒருநாள் போட்டிகளில் சிக்கன விகிதம் 4.30 ரன்கள். முதல் தர கிரிக்கெட்டில் மொத்தமாக 1136 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.இந்திய அணியின் கேப்டனாக ஒரு வருடம் பதவி வகித்துள்ளார்.

தற்போது இந்திய அணியின் தலைமைப் பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள கும்ப்ளேவுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா, முன்னாள் வீரர் சேவாக் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Story first published: Thursday, June 23, 2016, 19:59 [IST]
Other articles published on Jun 23, 2016
English summary
Anil Kumble has appointed as India's new Head Coach for a period of 1 year, by the Board of Control for Cricket in India
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X