For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சோஷியல் மீடியாவில் இந்திய கிரிக்கெட் டீமுக்கு அதிக ரசிகர்கள்.. 2வது இடம் யாருக்கு தெரியுமா?

By Veera Kumar

மும்பை: சோஷியல் மீடியாக்களில் இந்திய அணிக்குதான் அதிக ரசிகர்கள் இருப்பதாக கூறுகிறது புள்ளி விவரம்.

இந்திய கிரிக்கெட் அணியில் குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு மாபெரும் ஹீரோக்கள் உருவாகிக் கொண்டுள்ளனர். இதனாலேயே உலகம் முழுக்க இந்திய கிரிக்கெட் அணிக்கு ரசிகர்கள் உண்டு.

வெற்றியோ தோல்வியோ, தனிப்பட்ட பெர்பார்மன்ஸ்களை அந்த வீரர்கள் செய்து கொண்டுதான் வந்துள்ளனர். கபில் தேவ், கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், கும்ப்ளே, விராட் கோஹ்லி என தலைமுறைக்கு தக்க வீரியமான வீரர்களை இந்திய அணி உருவாக்கி வருகிறது.

ஹீரோக்கள்

ஹீரோக்கள்

கிரிக்கெட் வீரர்களை இந்திய ரசிகர்கள் வானில் இருந்து குதித்த தேவர்களை போல பார்க்கிறார்கள். சிறுவர்கள் தங்கள் ஆதர்ஷ புருஷர்களாக அவர்களை ஆராதிக்கிறார்கள்.

இந்தியாவுக்கு பெருமை

இந்தியாவுக்கு பெருமை

இதன் காரணமாக, இந்திய கிரிக்கெட் அணிக்கு சோஷியல் மீடியாக்களில் ரசிகர்கள் எண்ணிக்கை மிக அதிகம்., வேறு எந்த நாட்டு கிரிக்கெட் அணிக்கும் கிடைக்காத பெருமை இது.

பல வகை ஃபாலோவர்கள்

பல வகை ஃபாலோவர்கள்

இந்திய அணியின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்துள்ளோர் எண்ணிக்கை 26 மில்லியன் ரசிகர்கள், டிவிட்டரில் 2.67 மில்லியன் ஃபாலோவர்களும், இன்ஸ்டாகிராமில் 1.6 மில்லியன் ஃபாலோவர்களும் உள்ளனர்.

இரண்டாவது இடம்

இரண்டாவது இடம்

மொத்தத்தில் இந்திய அணியை பல சோஷியல் மீடியா ஃபிளாட்பார்மகளிலும் ஃபாலோ செய்வோர் எண்ணிக்கை 30 மில்லியனாகும். இந்தியாவுக்கு அடுத்த இடத்தை பிடித்துள்ளது எந்த நாடு தெரியுமா.. ஆஸ்திரேலியா.. பாகிஸ்தான் என நினைத்தால் உங்களுக்கு ஏமாற்றமே.

சர்ப்ரைஸ்

சர்ப்ரைஸ்

இந்தியாவுக்கு அடுத்த இடம் வங்கதேசத்துக்கு. அங்கு 10 மில்லியன் ரசிகர்கள் அந்த நாட்டு அணியை சோஷியல் மீடியாக்களில் ஃபாலோ செய்கிறார்கள். இப்போது தெரிகிறதா, ஏன் இந்தியா-வங்கதேசபோட்டிகள் என்றால் ஆக்ரோஷம் அலைமோதுகிறது என்று..!

Story first published: Saturday, July 23, 2016, 11:50 [IST]
Other articles published on Jul 23, 2016
English summary
The Indian team is the most followed cricket team in the world on social media, with a following of 30 million across all platforms.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X