For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இலங்கை அதிரடி வீரர் தில்ஷன் ஓய்வு! ஆஸி. தொடருடன் குட்பை

By Veera Kumar

கொழும்பு: 17 வருடமாக இலங்கை அணியில் இடம் பிடித்திருந்த முன்னணி கிரிக்கெட் வீரர் திலகரத்னே தில்ஷன் ஓய்வை அறிவித்துள்ளார்.

சொந்த மண்ணில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இலங்கை பங்கேற்றுள்ளது. இரு அணிகளும் தலா 1 போட்டிகளில் வென்றுள்ள நிலையில், இன்னும் 3 போட்டிகள் எஞ்சியுள்ளன.

Tillakaratne Dilshan to retire from ODIs, T20Is after Australia series

இப்போட்டி தொடர் முடிவடைந்ததும், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக தில்ஷன் இன்று அறிவித்தார். 2013ல் இவர் டெஸ்ட் ஆட்டங்களில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். எனவே தில்ஷன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து முற்றாக விடைபெற உள்ளார்.

  • 1999ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் களம் கண்டார் தில்ஷன்.
  • இதுவரை 87 டெஸ்ட், 329 ஒருநாள், 78 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார்.
  • ஒருநாள் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்த நான்காவது இலங்கை வீரர்.
  • டி20 போட்டிகளில் ஜெயவர்த்தனேக்கு அடுத்து சதம் அடித்த 2வது இலங்கை வீரர் தில்ஷன்.
  • 2011ல் பல்லேகெலேயில் நடந்த டி20 போட்டியில் ஆஸி.க்கு எதிராக இந்த சதத்தை (104* ரன்கள்) விளாசினார்.
  • கடந்த ஆண்டு தில்ஷன் கிரிக்கெட் வாழ்க்கையில் உச்சம். 25 போட்டிகளில் 1207 ரன்களை குவித்தார். இதில் 4 செஞ்சுரிகள் அடக்கம்.
  • டில்ஸ்கூப் எனப்படும், தலைக்கு மேலே பந்தை தூக்கிவிடும் வித்தியாசமான ஷாட்டுக்காக பெயர் பெற்றவர் இவர்.
Story first published: Thursday, August 25, 2016, 16:14 [IST]
Other articles published on Aug 25, 2016
English summary
Veteran Sri Lanka cricketer Tillakaratne Dilshan on Thursday (Aug 25) announced his retirement from international cricket after playing third ODI match against Australia in Dambulla on Sunday (Aug 28), and play his last T20I on Sep 9 in Colombo.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X