For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

'டோணி, த பெஸ்ட்... இணையற்றவர்' - சொல்கிறார்கள் உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்கள்!

By Shankar

மகேந்திர சிங் டோணி...

இன்றைய தேதியில் உலகமே கொண்டாடும் கிரிக்கெட் வீரர். ஆஸ்திரேலியாவுடனான போட்டிகளில் துவண்டு போன இந்திய அணியை, திடீரென உலகின் வலிமையான அணியாக முன் நிறுத்தியவர்.

அரை இறுதிப் போட்டியில் போராடித் தோற்றாலும், இந்திய அணி கவுரவமாக நாடு திரும்பக் காரணமானவர்.

டோணியைப் பற்றி உலகின் மிகச் சிறந்த கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் தெரியுமா...

சுனில் காவஸ்கர்

சுனில் காவஸ்கர்

என் மரணத்தின் தறுவாயில் நான் பார்க்க விரும்புவது, 2011-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் டோணி அடித்த அந்த சிக்ஸரைத்தான்.

கபில்தேவ்

கபில்தேவ்

டோணிதான் என் ஹீரோ. நாம் சச்சின், ஷேவாக் பற்றியெல்லாம் நிறையப் பேசிவிட்டோம். ஆனால் டோணியின் ஆட்டத் திறமை இணையற்றது.

கங்குலி

கங்குலி

இந்தியாவின் இணையற்ற கேப்டன் டோணிதான். அவருடைய சாதனை அதை நிரூபிக்கிறது,

சச்சின் டெண்டுல்கர்

சச்சின் டெண்டுல்கர்

டோணிதான் என் பெஸ்ட் கேப்டன். அவருடைய தலைமையில் விளையாடியதைத்தான் சிறப்பாகக் கருதுகிறேன்.

ட்ராவிட்

ட்ராவிட்

மிகச் சிறந்த தலைவர் டோணி. ஒரு கேப்டனாக அனைவரையும் சமத்துவமாக அரவணைத்துச் செல்லும் குணத்தை அவரிடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

பிராவோ

பிராவோ

ஒரு கேப்டன் எப்படி இருக்க வேண்டும் என்பதை டோணியிடம்தான் நான் கற்றுக் கொண்டேன்.

ஹர்ஷா போக்லே

ஹர்ஷா போக்லே

டோணி ஒரு இன்னிங்ஸில் கடைசி வரை நிற்கிறார் என்றால், நிச்சயம் அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்வார் என்று அர்த்தம்.

ஹஸ்ஸி

ஹஸ்ஸி

டோணியின் தலைமையில் விளையாடியதை என்னுடைய அதிர்ஷ்டமாகதக் கருதுகிறேன்.

ரவீந்திர ஜடேஜா

ரவீந்திர ஜடேஜா

பேட்டிங்கைக் கற்றுக் கொள்ள வேண்டுமென்றால், டோணியுடன் விளையாட வேண்டும்.

சானியா மிர்சா

சானியா மிர்சா

ராஞ்சியிலிருந்து கிரிக்கெட்டு டோணி வந்ததைப் போல, டென்னிசுக்கும் ஒருவர் வரவேண்டும்.

இயான் பிஷப்

இயான் பிஷப்

கடைசி ஓவரில் வெற்றிக்கு 15 தேவையான சூழலில் மிகுந்த அழுத்ததுக்குள்ளாவது டோணியல்ல, அவருக்கு பந்து வீசும் பவுலர்தான்!

வாசிம் அக்ரம்

வாசிம் அக்ரம்

அவர் (டோணி) வெறும் கிரிக்கெட்டராக மட்டுமல்ல, ஒரு தலைவராக உருவெடுத்தவர். அவர் சாதனைகளைப் பாருங்கள்.. நிச்சயம் இந்தியா கண்ட மிகச் சிறந்த கேப்டன் அவர்தான்.

ஸ்டீவ் வாஹ்

ஸ்டீவ் வாஹ்

ஒரு அணியைத் தேர்வு செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தால், ஓபனராக சச்சினையும், தலைவராக டோணியையும் மட்டுமே தேர்வு செய்வேன்.

Story first published: Saturday, March 28, 2015, 16:25 [IST]
Other articles published on Mar 28, 2015
English summary
Here is the compilation of top cricters of the world on India captain MS Dhoni.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X