For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஜூனியர் உலக கோப்பை: அரையிறுதியில் இலங்கையை வீழ்த்தி பைனலுக்குள் நுழைந்தது இந்திய அணி!

By Veera Kumar

டாக்கா: 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய அரையிறுதியில் இலங்கை அணியை 97 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி பைனலுக்குள் நுழைந்தது.

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் டி பிரிவில் இடம் பெற்றிருந்த இந்தியா அனைத்து லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது. காலிறுதியில் நமிபியா அணியை 197 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தி அசத்தியது இந்தியா.

இந்நிலையில், டாக்கா ஷேர் பங்களா தேசிய ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற அரையிறுதியில் பலம் வாய்ந்த இலங்கை அணியை எதிர்கொண்டது இந்தியா. டாசில் வென்ற இலங்கை பவுலிங்கை தேர்ந்தெடுத்ததால் இந்தியா முதலில் பேட்டிங்கை தொடங்கியது.

தடுமாற்ற தொடக்கம்

தடுமாற்ற தொடக்கம்

10 ஓவர்களில் 27 ரன்களுக்கு, 2 விக்கெட்டுகளை இந்தியா இழந்ததால், நிதானமாக ஆடத்தொடங்கியது. சர்பாஸ் கானின் 59 ரன்கள் உதவியோடு, இந்தியா சரிவில் இருந்து மீண்டது. இருப்பினும் ரன் ரேட் குறைவாகவே இருந்தது. 31 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு, 127 ரன்கள் எடுத்து ஆடிவந்தது.

அதிரடி

அதிரடி

இதன்பிறகு அதிரடி காட்டிய இந்திய அணி, 50 ஓவர்கள் முடிவில், 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 267 ரன்கள் குவித்தது. அன்மோல்ப்ரீத் சிங் அதிகபட்சமாக 72 ரன்கள் விளாசினார். வாஷிங்டன் சுந்தர் 43 ரன்கள் எடுத்தார்.

பந்து வீச்சு அபாரம்

பந்து வீச்சு அபாரம்

இதையடுத்து 268 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு, இலங்கை அணி ஆடியது. ஆனால், இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் தொடக்கத்திலேயே இலங்கை விக்கெட்டுகளை கபளிகரம் செய்தனர். ஸ்பின்னர்களும், கைகோர்த்துக்கொள்ள, இலங்கை சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தபடி இருந்ததது.

பைனலில் இந்தியா

பைனலில் இந்தியா

42.4 ஓவர்களில், இலங்கை அணி 170 ரன்களுக்கு ஆல்-அவுட் செய்யப்பட்டது. எனவே இந்திய அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடி, இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளது.

யாருடன் மோதல்?

யாருடன் மோதல்?

மற்றொரு அரையிறுதி போட்டியில், வரும் 11ம் தேதி, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன. அதில் வெற்றி பெறும் அணியுடன், இந்திய அணி, 14ம் தேதி நடைபெறும் இறுதி போட்டியில் மோதும்.

Story first published: Tuesday, February 9, 2016, 15:56 [IST]
Other articles published on Feb 9, 2016
English summary
Sri Lanka U19 opt to bowl in the world cup semi final game against India.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X