For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐக்கிய அரபு எமிரேட்ஸை 129 ரன்களில் வீழ்த்தியும் புள்ளி கணக்கில் கோட்டைவிட்ட பாகிஸ்தான்!

By Veera Kumar

நேப்பியர்: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி, முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது. ஆனால் பாகிஸ்தானோ அடித்து நொறுக்கி 339 ரன்களை குவித்தது. இதையடுத்து பேட்டிங் செய்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 210 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்ததால், பாகிஸ்தான் 129 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பாகிஸ்தான் அணிகள் நேப்பியர் மைதானத்தில் இன்று காலை மோதலை தொடங்கின. டாசில் வென்ற ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கேப்டன் முகமது தௌகிர் முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தார்.

பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் அபாரம்

பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் அபாரம்

ஆனால், நிலைமை வேறு மாதிரி மாறிப்போனது. பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் அடி்தது நொறுக்கி 50 ஓவர்கள் இறுதியில் 339 ரன்களை குவித்தனர். அந்த அணியின் தொடக்க வீரர் அகமது செஷாத் 93 ரன்கள் குவித்தார். ஹரிஷ் சொகைல் 70 ரன்களும், சோயிப் மசூத் 45 ரன்களும், மிஸ்பா உல் ஹக் 65 ரன்களும் குவித்தனர்.

ரன் குவிப்பு

ரன் குவிப்பு

கடைசி கட்டத்தில் அதிரடி காண்பித்த அப்ரிடி 7 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் வகாப் ரியாசுடன் களத்தில் நின்றார். எனவே நிர்ணயிக்கப்பட்ட ஐம்பது ஓவர்களில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 339 ரன்களை குவித்தது.

தொடக்கத்தில் சரிவு

தொடக்கத்தில் சரிவு

இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய யு.ஏ.இ அணியில், அம்ஜத் அலி 14 ரன்கள், ஆன்ட்ரி பெரேன்கர் 2 ரன்கள் எடுத்தனர். 'பாலக்காட்டு மாதவன்' கிருஷ்ண சந்திரன் 11 பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். இதனால் 25 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து யு.ஏ.இ தடுமாறியது.

நடுவரிசை அருமை

நடுவரிசை அருமை

இருப்பினும் குர்ரம்கான் 43, சைமான் அன்வர் 62 ரன்கள் எடுத்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். மும்பையை பூர்வீகமாக கொண்டவரான யு.ஏ.இ விக்கெட் கீப்பர் ஸ்வப்னில் பாட்டில் 36 ரன்களும், அம்ஜத் ஜாவித் 40 ரன்களும் எடுத்து அவுட் ஆகினர்.

யு.ஏ.இ தோல்வி

யு.ஏ.இ தோல்வி

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் யு.ஏ.இ 8 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. எனவே, பாகிஸ்தான் 129 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வடபோச்சே

வடபோச்சே

இருப்பினும் யு.ஏ.இ அணியை ஆல்-அவுட் செய்வதில் பாகிஸ்தான் பவுலர்கள் கோட்டை விட்டனர். வெற்றி புள்ளிகள் அடிப்படையில், மே.இ.தீவுகளை முந்த கிடைத்த வாய்ப்பு இதனால் பாகிஸ்தானுக்கு பறிபோனது. ஏனெனில் வெஸ்ட் இண்டீஸ் 2 வெற்றிகளுடன் 'மைனஸ் 0.313 புள்ளிகளுடன்' 3வது இடத்திலுள்ள நிலையில், பாகிஸ்தான், அதே 2 வெற்றிகளுடன், 'மைனஸ் 0.385' புள்ளிகளுடன் நாலாவது இடத்துக்கே வர முடிந்தது.

Story first published: Wednesday, March 4, 2015, 14:59 [IST]
Other articles published on Mar 4, 2015
English summary
United Arab Emirates won the toss and sent Pakistan in to bat on Wednesday in a Cricket World Cup Pool B match that could be pivotal for both teams.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X