For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உலக கோப்பை இறுதி போட்டிக்கான அம்பயர்கள் அறிவிப்பு!

By Veera Kumar

துபாய்: உலக கோப்பை இறுதி போட்டிக்கான நடுவர்கள் பெயரை ஐசிசி அறிவித்துள்ளது. அதில், நோபால் சர்ச்சையில் சிக்கிய பாகிஸ்தான் நடுவர் அலீம்தார் பெயர் இடம்பெறவில்லை.

உலக கோப்பை கிரிக்கெட்டில், ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையே வரும் 29ம்தேதி மெல்போர்னில் இறுதி போட்டி நடைபெற உள்ளது.

இதற்கான அம்பயர் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதன் விவரம்: ஞ்சன் மதுகலே (போட்டி ரெப்ரி), குமார் தர்மசேனா மற்றும் ரிச்சர்ட் கேட்லிபோரா (கள நடுவர்கள்) மாராய்ஸ் எராஸ்மஸ் (மூன்றாம் நடுவர்) இயான் கவுல்ட் (நாலாம் நடுவர்) .

Umpires named for World Cup final, no place for Aleem Dar after controversy

இந்தியா-ஆஸ்திரேலியா அரையிறுதியின்போது நடுவர்களாக குழுவில் ஒரேயொரு மாற்றம் மட்டும் செய்து இறுதி போட்டியிலும் ஐசிசி களமிறக்கியுள்ளது. அதாவது, நாலாம் நடுவராக இருந்த ரிச்சர்ட்டுக்கு பதிலாக இயான் கவுல்ட் சேர்க்கப்பட்டுள்ளார். மற்ற அனைத்தும் அதே குழுதான்.

மேலும், இந்தியா-வங்கதேச காலிறுதி போட்டியின்போது நடுவராக இருந்த பாகிஸ்தானை சேர்ந்த அலீம்தார், அரையிறுதி மட்டுமில்லாமல், பைனலிலும் பெயர் சேர்க்கப்படவில்லை.

ரோகித்ஷர்மா அவுட்டான நல்ல பந்தை, நோபால் என்று அறிவித்து அவரை காப்பாற்றிவிட்டார் என்று அலீம்தார் மீது வங்கதேச ரசிகர்கள் குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, March 27, 2015, 13:18 [IST]
Other articles published on Mar 27, 2015
English summary
The International Cricket Council (ICC) has kept Pakistan's Aleem Dar out of ICC World Cup 2015 final umpiring duties after his controversial no-ball decision in the quarter-final.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X