For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இசா குஹா.. இங்கிலாந்தின் "பாயும் புலி"!

லண்டன்: மகளிர் கிரிக்கெட் என்று வரும்போது இசா குஹாவும் மறக்காமல் நினைவுக்கு வருவார். 32 வயதாகும் இசா குஹா இப்போது சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று விட்டார். இவர் பந்து வீச்சாளராக வலம் வந்த காலத்தில் ஒரு புயலாகவே எதிரணியினருக்கு அச்சுறுத்தலாக காணப்பட்டார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான இசா குஹா, இங்கிலாந்து மகளிர் அணியின் முக்கியப் பந்து வீச்சாளராக திகழ்ந்தவர். டெஸ்ட், ஒ ரு நாள், டுவென்டி 20, உள்ளூர் போட்டிகள் என கலக்கியவர்.

11 வருட காலம் சர்வதேச கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணியின் அசைக்க முடியாத வீராங்கனையாக இருந்தார்.

83 ஒரு நாள் போட்டிகள்

83 ஒரு நாள் போட்டிகள்

83 ஒரு நாள் போட்டிகள், எட்டு டெஸ்ட் போட்டிகள், 22 டுவென்டி 20 போட்டிகள் என விளையாடியுள்ளார். இவரது வேகப் பந்து வீச்சு கிட்டத்தட்ட ஒரு குட்டிப் புயல் போலவே இருக்கும்.

130 விக்கெட்டுகள்

130 விக்கெட்டுகள்

ஒரு நாள் போட்டிகளில் 101 விக்கெட்களையும், டெஸ்ட் போட்டிகளில் 29 விக்கெட்களையும் இவர் சாய்த்துள்ளார். மேலும், 2009ம் ஆண்டு மகளிர் உலகக் கோப்பை மற்றும் டுவென்டி 20 கோப்பைகளை இங்கிலாந்து வென்றபோது இவரும் முக்கியப் பங்காற்றியுள்ளார். 2005ல் இங்கிலாந்து ஆசஷ் தொடரை வென்றதிலும் இசாவின் கைவண்ணம் உள்ளது.

இசாவும், டிராவிடும்

இசாவும், டிராவிடும்

இசாவுக்கும், டிராவிடுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு டிராவிட் ஓய்வை அறிவித்த 2012ம் ஆண்டு மார்ச் 9ம் தேதிதான் இசாவும் தனது ஓய்வை அறிவித்தார்.

முன்னாடி வீராங்கனை

முன்னாடி வீராங்கனை

மேற்கு வங்காளம்தான் இசாவின் பெற்றோருக்கு பூர்வீகம் ஆகும். இந்திய வீராங்கனைகளுக்கு இசாவும் ஒரு முன்னோடியாக முன்னுதாரணமாக திகழ்ந்துள்ளார். விளையாட்டு வீராங்கனையாக மட்டுமல்லாமல் விமர்சகராகவும் ஜொலிப்பவர் இசா.

உலகின் முதல் நிலை பவுலர்

உலகின் முதல் நிலை பவுலர்

2008ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி உலகின் நம்பர் ஒன் பவுலராக இவர் ஐசிசியின் ரேங்கிங் பட்டியலில் இடம் பிடித்தார். இது அவரது வாழ்நாள் சாதனையாகும். சர்வதேச விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்று விட்டாலும் கூட கவுன்டி கிரிக்கெட்டில் தொடர்ந்து ஆடி வருகிறார் இசா.

Story first published: Saturday, June 24, 2017, 16:21 [IST]
Other articles published on Jun 24, 2017
English summary
Isa Guha was Unstoppable when she was the main bowler of the England women's cricket team. She has helped her national side to win the WC and Twenty 20 series.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X