For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சச்சின்-வார்னே கிரிக்கெட் தொடரின் சிறப்பு விருந்தினராக ஓபாமா பங்கேற்பு?

By Veera Kumar

வாஷிங்டன்: கிரிக்கெட் ஆல் ஸ்டார்ஸ் விளையாட்டை பார்க்க அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வருகை தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அமெரிக்காவில் கிரிக்கெட் பிரபலமாகும் வாய்ப்பு உள்ளது.

முன்னாள் ஜாம்பவான் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும், கிரிக்கெட் ஆல் ஸ்டார்ஸ் என்ற டி20 தொடர், அமெரிக்காவில் நடைபெற உள்ளது.

நவம்பர் 7ம் தேதி முதல் போட்டி நடைபெறுகிறது. சச்சின் மற்றும், ஷேன் வார்னே ஆகியோர் தலைமையில் இரு அணிகள் மோதுகின்றன.

US President Barack Obama to be '13th Man' in Sachin-Warne series?

இதனிடையே கிரிக்கெட் ஆல் ஸ்டார்ஸ் அமைப்பின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் அக்கவுண்டில் ஒரு டிவிட் வெளியாகியுள்ளது. அதில், ஒபாமாவை நோக்கி, "உங்களுக்கு பிரையன்லாரா நினைவு இருக்கிறதா? சச்சின், ஷேன் வார்னே உடன் நீங்கள் 13வது வீரராக பங்கேற்பீர்களா? என கேட்கப்பட்டுள்ளது.

கடந்த 2009ல் ஓபாமாவை லாரா சந்தித்தார். அப்போது, ஒபாமாவுக்கு லாரா தனது கையெழுத்திட்டு ஒரு பேட்டை பரிசளித்தார். அப்போது, பேட் செய்வது எப்படி என ஒபாமாவுக்கு, லாரா சொல்லிக்கொடுத்தார். அந்த போட்டோவும் டிவிட்டரில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அழைப்பை ஏற்று, ஒபாமா போட்டி நடைபெறும்போது வருகை தந்தால், இந்த போட்டித்தொடர் மேலும் ஒரு கட்டத்திற்கு முன்னேறும்.

Story first published: Friday, October 9, 2015, 17:56 [IST]
Other articles published on Oct 9, 2015
English summary
Cricket legends Sachin Tendulkar and Shane Warne have unveiled their All Stars Series to be played in the United States of America. With 3 exhibition Twenty20 matches next month with the greats of the game, there is a possibility of American President Barack Obama being the "13th Man".
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X