ஓ மை காட்.. சீனியர் பிரசாத்தை விட.. ஜூனியர் பிரசாத் "ரிச் எக்ஸ்பீரியன்ஸ்" வச்சிருக்காரே!

By:

டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுத் தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத்தின் நியனம் தொடர்ந்து விவாதங்களை எழுப்பி வருகிறது. இதில் என்ன கொடுமை என்றால் இந்திய இளைஞர் அணியின் தேர்வுக் குழுத் தலைவராக உள்ள முன்னாள் பந்து வீச்சாளர் பிகே வெங்கடேச பிரசாத்தை விட எம்.எஸ்.கே பிரசாத் அனுபவம் குறைந்தவர் என்பதுதான்.

இப்படி ஒரு கோமாளித்தனமான முடிவுக்கு ஏன் பிசிசிஐ வந்தது என்று தெரியவில்லை. அல்லது தேர்வுக் குழுத் தலைவர் பதவிக்கு வேறு ஆளே கிடைக்கவில்லையா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

எம்.எஸ்.கே. பிரசாத்தை விட இளைஞர் அணித் தலைவர் வெங்கடேச பிரசாத் நிறைந்த அனுபவம் உடையவர். இதற்குப் பேசாமல் வெங்கடேச பிரசாத்தை சீனியர் அணியின் தேர்வுக் குழுத் தலைவராக்கியிருக்கலாம் என்றும் பேசுகிறார்கள் ரசிகர்கள்.

வெங்கடேச பிரசேத்

இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணி தேர்வுக் குழுத் தலைவராக வெங்கடேச பிரசாத் இருந்து வருகிறார். இவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இவர் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆவார். ஜவகல் ஸ்ரீநாத்துடன் இணைந்து இந்திய அணியில் சிறப்பாக செயல்பட்டவர்.

எம்.எஸ்.கே. பிரசாத்தை விட சீனியர்

உண்மையில் சீனியர் அணியின் தேர்வுக் குழுத் தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத்தை விட பல வகையிலும் சிறந்தவர் வெங்கடேஷ் பிரசாத். ஆனால் இவரை ஜூனியர் அணியின் தேர்வுக் குழுத் தலைவராக உட்கார வைத்துள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம்.

33 டெஸ்ட் 123 ஒரு நாள் போட்டி

வெங்கடேச பிரசாத் 33 டெஸ்ட் போட்டிகள், 161 ஒரு நாள் போட்டிகளில் ஆடியுள்ளார். இதுதவிர 123 முதல் தரப் போட்டிகளிலும் அவர் ஆடியுள்ளார். லிஸ்ட் ஏ போட்டிகளின் எண்ணிக்கை 236 ஆகும். சிறந்த வேகப் பந்து வீச்சாளராக வலம் வந்தவர்.

விக்கெட்கள்

டெஸ்ட் போட்டிகளில் 96 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார் வெங்கடேச பிரசாத். ஒரு நாள் போட்டிகளில் 196 விக்கெட் சாய்த்துள்ளார். முதல் தரப் போட்டிகளில் 361 விக்கெட்களையும், லிஸ்ட் ஏ போட்டிகளில் 295 விக்கெட்களையும் சாய்த்துள்ளார்.

பெஸ்ட் சாய்ஸ்

எம்.எஸ்.கே பிரசாத்துடன் ஒப்பிடுகையில் பல வகையிலும் அனுபவம் வாய்ந்தவர் வெங்கடேச பிரசாத். சர்வதேச அளவில் மைதானங்கள் குறித்த அறிவு, வீரர்கள், அணிகள் குறித்த அறிவும் இவருக்கு நிச்சயம் கூடுதலாகவே உண்டு. ஆனால் இவரை ஜூனியர் அணியில் உட்கார வைத்து விட்டு, சொல்லிக் கொள்ளும்படி ஒன்றுமே இல்லாத எம்.எஸ்.கே. பிரசாத்தை எப்படி சீனியர் அணியின் தேர்வுக் குழு தலைவர் ஆக்கினர் என்பதுதான் பெரிய ஆச்சரியமாக உள்ளது.

English summary
Indian junior team chief selector Venkatesa Prasad is rich experienced than senior team chief selector MKS Prasad.
Please Wait while comments are loading...

Videos