கர்வம் தலைக்கேறிவிட்டதா?: மித்தாலி ராஜ் யாரென்று கூட கோஹ்லிக்கு தெரியாதாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லி, பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலி ராஜ் யார் என்று தெரியாமல் வாழ்த்து தெரிவித்த சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்தியாவின் மிதாலி ராஜ், நேற்று நடைபெற்ற உலக கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியின் ஆஸி.க்கு எதிரான ஆட்டத்தில் ஒரு நாள் கிரிக்கெட்டில் 6000 ரன்களை கடந்து சாதித்தார்.

இத்தனை ரன்களை குவித்த முதல் வீராங்கனை என்ற சாதனையை படைத்தார் மிதாலிராஜ்.

வாழ்த்து

வாழ்த்து

இதைடுத்து மிதாலிராஜுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. இந்திய ஆண்கள் அணி கேப்டன் விராட் கோஹ்லியும், மிதாலிக்கு வாழ்த்து தெரிவிக்க நினைத்து, பேஸ்புக்கில் அதை செய்தார். மிதாலி ராஜ் படத்தை போட்டு, வாழ்த்துக்கள் தெரிவிப்பதாக அவர் நினைத்துக்கொண்டார்.

படத்தை மாற்றிவிட்டார்

படத்தை மாற்றிவிட்டார்

விராட் கோஹ்லி மிதாலி ராஜ் படத்திற்கு பதிலாக மற்றொரு வீராங்கனை பூணம் ரவுட் படத்தை போட்டு, வாழ்த்து தெரிவித்துவிட்டார். இதை அவர் உணர்ந்தாரோ இல்லையோ, நெட்டிசன்கள் கண்டுபிடித்துவிட்டனர்.

காதல் கண்கட்டுதே

காதல் கண்கட்டுதே

விராட் கோஹ்லிக்கு சக துறையை சேர்ந்த ஒரு வீராங்கனையை தெரியவில்லையா என கேலி செய்கிறார்கள் நெட்டிசன்கள். காதலி அனுஷ்கா சர்மாவோடு சுற்றுலா போயிருக்கும், கோஹ்லிக்கு, காதல் கண்ணை மறைத்துவிட்டதா, அல்லது உண்மையிலேயே மிதாலி ராஜை கோஹ்லி சரியாக தெரிந்து வைத்திருக்கவில்லையா என்பதுதான் புரியவில்லை.

ஈகோ காரணமா?

ஈகோ காரணமா?

பயிற்சியாளர் அனில்கும்ப்ளேவுடன் ஈகோ யுத்தம் நடத்தி அவரை பதவியிலிருந்து விரட்டிய கோஹ்லி, சாதனையாளரான மிதாலிராஜை வேண்டுமென்றே, அவமானப்படுத்திவிட்டாரா என்ற கேள்வியும் எழுகிறது. "மிதாலிராஜெல்லாம் நினைவில் வைக்க கூடிய அளவுக்கு பெரிய ஆளில்லை" என்பதைத்தான் போட்டோவை மாற்றி போட்டு சொல்ல வருகிறீர்களா, மிஸ்டர் கோஹ்லி?

Virat Kohli congratulates Mithali but uses Poonam Raut's pic | Oneindia News

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Indian captain Virat Kohli congratulated his women’s cricket counterpart Mithali Raj for becoming the highest run-scorer and alsoscaling the 6000 ODI run mark in One-Day Internationals (ODI). But, Virat in his excitement made a mistake of using the picture of the Poonam Raut who scored a century against Australia yesterday in the ICC Women’s World Cup. Even though Virat did not realize the fault the online community was quick enough to point out the mistake.
Please Wait while comments are loading...