For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சென்னை டெஸ்ட் வெற்றியால் புது சாதனை படைத்தது கோஹ்லி படை

By Veera Kumar

சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இந்தியா வென்றதன் மூலம், புது சாதனையை படைத்துள்ளது கோஹ்லி படை.

இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரில் 1 போட்டி டிரா ஆன நிலையில், சென்னையில் நிறைவடைந்த இன்றைய 5வது டெஸ்ட் உட்பட 4 போட்டிகளை இந்தியா வென்று தொடரை அபாரமாக கைப்பற்றியது.

Virat Kohli-led India set new Test record with win in Chennai

இதன் மூலம், தொடர்ச்சியாக 18 போட்டிகளில் தோல்வியே சந்திக்காமல் டெஸ்ட் போட்டிகளில் சாதனை படைத்துள்ளது இந்தியா.

முன்பு, 1985 முதல் 1987க்கு இடைப்பட்ட காலத்தில் தொடர்ச்சியாக 17 போட்டிகளில் இந்தியா தோல்வியே சந்திக்கவில்லை.

2015 ஆகஸ்ட் மாதம், இலங்கையை இந்தியா 278 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

அதே மாதம், 117 ரன்கள் வித்தியாசத்திலல் மீண்டும் இலங்கையை தோற்கடித்தது இந்தியா.

Virat Kohli-led India set new Test record with win in Chennai

2015 நவம்பர் மாதம் தென் ஆப்பிரிக்காவை 108 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்தியா.

அதே ஆண்டு அதே மாதம் தென் ஆப்பிரிக்காவுடனான மற்றொரு டெஸ்ட் டிரா ஆனது.

ஆனால் அதே மாதம் நடைபெற்ற அடுத்த போட்டியில் தென் ஆப்பிரிக்காவை இந்தியா 124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.

2015 டிசம்பர் மாதம் நடைபெற்ற அடுத்த டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 337 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்தியா.

2016 ஜூலை மாதம் மே.இ.தீவுகள் அணியை இன்னிங்ஸ் மற்றும் 92 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்தியா.

2016 ஜூலையில் மே.இ.தீவுகளுடனான டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது.

Virat Kohli-led India set new Test record with win in Chennai

அடுத்ததாக மே.இ.தீவுகளுக்கு எதிரான போட்டியில் 237 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி.

அடுத்ததாக மே.இ.தீவுகளுடான போட்டி டிராவில் முடிந்தது.

செப்டம்பர் மாதம் நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்தை இந்தியா 197 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

செப்டம்பரில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் நியூசிலாந்தை 178 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்தியா.

Virat Kohli-led India set new Test record with win in Chennai

அக்டோபரில் நடந்த போட்டியில் நியூசிலாந்தை 321 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது இந்தியா. நவம்பரில் ராஜ்கோட்டில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டி டிராவில் முடிவடைந்தது. விசாகபட்டினத்தில் நடந்த போட்டியில் இந்தியா 246 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. மொகாலியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்திலும், மும்பையில் இன்னிங்ஸ் மற்றும் 36 ரன்கள் வித்தியாசத்திலும் இந்தியா வென்றது. சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 75 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

முந்தைய சாதனையின்போது இந்தியா 12 முறை டிரா, 1 முறை டை கண்டது. 4 வெற்றிகளை மட்டுமே ருசித்திருந்தது. ஆனால் இப்போதைய கோஹ்லி படை அபாரமான வெற்றிகளை சுவைத்துள்ளது.

Story first published: Wednesday, December 21, 2016, 2:07 [IST]
Other articles published on Dec 21, 2016
English summary
Captain Virat Kohli took India to a new Test record as the team completed a 4-0 series victory against England here today (December 20).
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X