For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சொதப்பிய வாட்சன்.. கேப்டன் இல்லாமல் தத்தளிக்கிறதா ஆர்.சி.பி.. கோஹ்லி ரிட்டர்ன் எப்போது?

By Veera Kumar

ஹைதராபாத்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தோற்ற பிறகுதான் கேப்டன் கோஹ்லியின் முக்கியத்துவம் அந்த அணிக்கு புரிய ஆரம்பித்துள்ளது.

தோள்பட்டை காயம் காரணமாக, விராட் கோஹ்லி ஐபிஎல் தொடக்க ஆட்டத்தில் பங்கேற்கவில்லை. அவர் நல்ல உடல் தகுதி பெற்ற பிறகுதான் களமிறங்க திட்டமிட்டுள்ளார்.

அடுத்ததாக பிசிசிஐ மருத்துவ குழு கோஹ்லிக்கு ஏப்ரல் 2வது வாரத்தில் உடல் பரிசோதனை செய்து பார்க்க உள்ளது. அதன்பிறகுதான் கோஹ்லி களம் புகுவாரா என்பது தெரியவரும்.

உடல் தகுதி

உடல் தகுதி

ஆனால் கோஹ்லி பெரிய வலியால் பாதிக்கப்படவில்லை என்றே தெரிகிறது. ஏனெனில் நேற்று தனது அணியை ஊக்குவிக்க ஹைதராபாத் மைதானத்திற்கு வந்து பெவிலியனில் இருந்தபடி தனது வீரர்களை அவர் உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார். எனவே ஏப்ரல் 2வது வாரத்திற்கு பிறகு கோஹ்லி களமிறங்கவே அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

வாட்சன் சொதப்பல்

வாட்சன் சொதப்பல்

கோஹ்லி இல்லாத ஆர்.சி.பி பலவீனமாகவே காட்சியளித்தது. தற்காலிக கேப்டனாக செயல்பட்ட ஷேன் வாட்சன் கேப்டனுக்குரிய பொறுப்போடு ஆடவில்லை. 3 ஓவர்களுக்கு 41 ரன்களை அள்ளிக்கொடுத்தார் வாட்சன். ஃபார்மில் இல்லாத ஷிகர் தவான் கூட இவரது முதல் ஓவரை அடித்து நொறுக்கிவிட்டார். பேட்டிங்கிலும் சோபிக்காத அவர் 22 ரன்கள் மட்டுமே எடுத்தார். கொடுத்த ரன்னை கூட அடிக்கவில்லை வாட்சன்.

ஆக்ரோஷம்

ஆக்ரோஷம்

வாட்சன் மைதானத்தில் ஆக்ரோஷத்தை காட்டி வீரர்களை உற்சாகப்படுத்துவதிலும் கோஹ்லி அருகில் கூட நிற்க முடியவில்லை. டிவில்லியர்ஸ், கோஹ்லி ஆகியோர் இன்று பெங்களூர் அணி பேட்டிங் லைன் மந்தமாக உள்ளது. கோஹ்லி வருகைக்கு பிறகுதான் அந்த அணியில் ஆக்ரோஷத்தை பார்க்க முடியும்.

ஃபிட்டானா வருவேன்

ஃபிட்டானா வருவேன்

இதுகுறித்து கோஹ்லி கூறுகையில், நான் 120 சதவீதம் ஃபிட்டாக இருப்பதாக உணர்ந்த பிறகுதான் களலமிறங்குவேன். உடலின் ஒரு பகுதியில் ஏற்பட்ட பிரச்சினைக்காக ஆட முடியாமல் இருப்பது வருத்தம் தருகிறது. யுவராஜ்சிங் சிறப்பாக ஆடுவது மகிழ்ச்சி. இந்திய அணியின் கேப்டன் என்ற வகையில்தான் நான் இதை பார்க்கிறேன். ஆர்.சி.பி அணிக்கு யுவராஜ்சிங் ஃபார்ம் என்பது தலைவலிதான். இவ்வாறு கோஹ்லி தெரிவித்தார். எனவே உடல் நலம் நன்கு தேறியபிறகுதான் கோஹ்லியை களத்தில் பார்க்க முடியும்.

Story first published: Thursday, April 6, 2017, 13:01 [IST]
Other articles published on Apr 6, 2017
English summary
Virat Kohli injured his shoulder while fielding during India's third Test match against Australia in Ranchi last month
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X