For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

விராட் கோஹ்லி ரன் குவிப்பு.. வியக்கும் விவியன் ரிச்சர்ட்ஸ்

By Veera Kumar

ஆன்டிகுவா: விராட் கோஹ்லி டபுள் செஞ்சுரி விளாசியதை மேற்கிந்திய தீவுகள் முன்னாள் வீரர், விவியன் ரிச்சர்ட்ஸ் வெகுவாக பாராட்டியுள்ளார்.

மே.இ.தீவுகளுக்கு எதிரான, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், விராட் கோஹ்லி 200 ரன்கள் விளாசி அவுட் ஆனார்.

இந்திய அணி 566 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. முதல் முறையாக கோஹ்லி டபுள் செஞ்சுரி விளாசி சாதனை படைத்தார்.

வாழ்த்து

வாழ்த்து

இதுகுறித்து மே.இ.தீவுகள் அணி ஜாம்பவான், விவியன் ரிச்சர்ட்ஸ் பிசிசிஐ வெப்சைட்டுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது: நான் போட்டி தொடங்கும் முன்பாக கோஹ்லியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துவிட்டு வந்தேன்.

சிறந்த ஆட்டம்

சிறந்த ஆட்டம்

அதேநேரம், கோஹ்லி டபுள் செஞ்சுரி அடித்து இந்திய அணி ரன் குவிக்க உதவுவார் என நினைக்கவில்லை. திறமையான வீரர் எந்த நாட்டுக்காரராக இருந்தாலும், ஆன்டிகுவா ரசிகர்கள் பாராட்டுவார்கள்.

வாய்ப்பு

வாய்ப்பு

கோஹ்லியின் ஆட்டத்தை நேரில் பார்த்து ரசிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மிகச்சிறப்பான ஒரு ஆட்டம் அதுவாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேற்கிந்திய தீவுகள் ஆட்டம்

மேற்கிந்திய தீவுகள் ஆட்டம்

வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சில் 33 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இன்று 3வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

Story first published: Saturday, July 23, 2016, 16:41 [IST]
Other articles published on Jul 23, 2016
English summary
West Indian batting legend Sir Vivian Richards has praised Indian captain Virat Kohli after he scored his maiden double century in the 1st Test on Friday (July 22).
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X