For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

குடும்பத்தோடு கோஹ்லிக்கு "ஐஸ்" வைக்கிறாரே ரிச்சர்ட்ஸ்.. இது கும்ப்ளேவுக்கு நல்லதா, கெட்டதா?

நார்த் சவுண்ட், ஆன்டிகுவா: இந்திய அணியின் பயிற்சியாளராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டவர் விவியன் ரிச்சர்ட்ஸ். காரணம் அவருக்குள்ளும் ரொம்ப காலமாக அந்த ஆசை இருந்து வருகிறது. ஆனால் அது இதுவரை நிறைவேறவில்லை. இந்த நிலையில் கேப்டன் கோஹ்லியுடன் தொடர்ந்து நெருக்கம் காட்டி வருகிறார் ரிச்சர்ட்ஸ்.

மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக கலக்கியவர் ரிச்சர்ட்ஸ். இவரது ஸ்டைல் அதிரடியை இன்று வரை மறக்க முடியாத பலர் உள்ளனர்.

ரிச்சர்ட்ஸ், கார்டன் கிரீனிட்ஜ், டெஸ்மான்ட் ஹெய்ன்ஸ் ஆகியோர் ஆடிய காலத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி அசைக்க முடியாத ராஜாவாக வலம் வந்தது.

பயிற்சியாளர் ஆசை

பயிற்சியாளர் ஆசை

தற்போது ரிச்சர்ட்ஸ் பயிற்சியாளராகும் ஆசையில் உள்ளார். குறிப்பாக இந்தியாதான் இவரது மனதில் நீண்ட காலமாகவே உள்ளது. இந்திய அணியின் பயிற்சியாளராக வேண்டும் என்று பல காலமாகவே இவர் விருப்பம் தெரிவித்து வருகிறார்.

2007 முதல்

2007 முதல்

2007ம் ஆண்டு முதலே இவர் இந்திய அணியின் பயிற்சியாளராக வேண்டும் என்ற ஆர்வத்தை அவ்வப்போது வெளிப்படுத்தி வருகிறார் (http://tamil.oneindia.com/news/2007/03/29/cricket.html). ஆனால் அதற்கான வாய்ப்புதான் கை கூடாமல் இருந்து வருகிறது.

கோஹ்லியுடன் நெருக்கம்

இந்த நிலையில் சமீப காலமாக கேப்டன் கோஹ்லியுடன் நெருக்கம் காட்ட ஆரம்பித்துள்ளார் ரிச்சர்ட்ஸ். ஆன்டிகுவா டெஸ்ட் போட்டிக்கு முன்பு அவர் கோஹ்லி மற்றும் வீரர்களை சந்தித்துப் பேசினார். நிறைய டிப்ஸ் கொடுத்தார்.

வெற்றி பெற்ற இந்தியா

வெற்றி பெற்ற இந்தியா

இதையடுத்து அந்தப் போட்டியில் இந்தியாவும் சிறப்பாக ஆடி சாதனை படைத்தது. கோஹ்லியும் கூட ரிச்சர்ட்ஸுக்கு நன்றி கூறியிருந்தார். ரிச்சர்ட்ஸ் கொடுத்த டிப்ஸ்தான் அவருக்கு உதவியிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

மகனுடன் பரிசும் கொடுத்த ரிச்சர்ட்ஸ்

மகனுடன் பரிசும் கொடுத்த ரிச்சர்ட்ஸ்

இந்த நிலையில் தனது மகன் மாலியுடன், கோஹ்லியை மீண்டும் சந்தித்துள்ளார் ரிச்சர்ட்ஸ். அப்போது கோஹ்லிக்காக தான் வரைந்த ஓவியம் ஒன்றை அவருக்கு பரிசாக கொடுத்தார் மாலி.

நெகிழ்ச்சியில் கோஹ்லி

நெகிழ்ச்சியில் கோஹ்லி

ரிச்சர்ட்ஸ் காட்டும் அன்பு, மாலியின் பரிசு கோஹ்லியை நெகிழ வைத்து விட்டதாம். ரிச்சர்ட்ஸின் பெயர் சூட்டப்பட்ட மைதானத்தில்தான் இந்தியா- மேற்கு இந்தியத் தீவுகள் முதல் டெஸ்ட் போட்டியை ஆடின என்பது குறிப்பிடத்தக்கது.

மாலியும் கிரிக்கெட் வீரரே

மாலியும் கிரிக்கெட் வீரரே

ரிச்சர்ட்ஸின் மகன் மாலியும் கூட கிரிக்கெட் வீரர்தான். 18 முதல் தர கிரி்கெட் போட்டிகளில் ஆடியுள்ளார். நன்றாக ஓவியம் வரைவார். மேலும் ஒரு ஆர்ட் காலரியையும் அவர் வைத்துள்ளார். தங்களது சொந்த ஊரில் வைத்து கோஹ்லி இரட்டை சதம் அடித்ததைப் பாராட்டி கெளரவிக்கும் வகையில் இந்த ஓவியத்தை தான் வரைந்ததாக கூறியுள்ளார் மாலி. ஒரே நாளில் வரையப்பட்டதாம் இந்த ஓவியம்.

வருங்கால பயிற்சியாளர் ஆவாரா?

வருங்கால பயிற்சியாளர் ஆவாரா?

ரிச்சர்ட்ஸ் - கோஹ்லி நெருக்கத்தைப் பார்த்தால் வருங்காலத்தில் இந்திய அணியின் பயிற்சியாளராகும் வாய்ப்பு ரிச்சர்ட்ஸுக்குக் கிடைத்தாலும் கிடைக்கலாம்.

காரணம் இருக்கு பாஸ்!

காரணம் இருக்கு பாஸ்!

மேற்கு இந்தியத் தீவுகளுக்கு இந்திய அணி வந்துள்ளது. அந்த அடிப்படையில் ரிச்சர்ட்ஸ் பாத்திருக்கலாம். இதில் என்ன பெரிதாக இருக்கிறது என்ற கேள்வி எழலாம். ஆனால் மற்ற யாரும் வந்து கோஹ்லியை இப்படி அடுத்தடுத்து சந்திக்கவில்லை என்பதால்தான் ரிச்சர்ட்ஸ் குறித்த "கியூரியாசிட்டி" அதிகமாக எழுகிறது.

Story first published: Tuesday, July 26, 2016, 13:26 [IST]
Other articles published on Jul 26, 2016
English summary
After completing a record innings and 92-run victory over the West Indies in the 1st Test, India captain Virat Kohli had special guests visiting him at the team hotel.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X