For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வார்னர், தவான், வில்லியம்சன் அதிரடி.. பஞ்சாப் அணியை 26 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஹைதராபாத்

மொகாலியில் நடந்த ஐபிஎல் லீக் போட்டியில், பஞ்சாப் அணியை 26 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணி வீழ்த்தியது.

By Karthikeyan

மொகாலி: ஐபிஎல் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐ.பி.எல். தொடரில் இன்றைய 2-வது ஆட்டம் மொகாலியில் நடைபெற்று வருகிறது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிராக டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேப்டன் மேக்ஸ்வெல் பவுலிங் தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணிக்கு வார்னர், தவான் அதிரடி தொடக்கம் தந்தனர்.

Warner, Dhawan, Williamson fifties propel SRH to 207/3 against KXIP

இதனால் ஸ்கோர் மளமளவென எகிறியது. வார்னர் 25 பந்தில் 4 பவுண்டரி, சிக்சர் உடன் 51 ரன்கள் குவித்தார். மறுபுறம் அதிரடி காட்டிய தவான் 48 பந்தில் 9 பவுண்டரி, 1 சிக்சருடன் 77 ரன்கள் சேர்த்தார்.

வார்னர் அவுட்டான பின்னர் வந்த வில்லியம்சன் 27 பந்தில் 2 சிக்ஸ்சர், 4 பவுண்டரி விளாசி 54 ரன்கள் எடுத்தார். யுவராஜ் சிங் 15 ரன்கள் மட்டும் எடுத்து வெளியேறினார். இதனால் 20 ஓவர் முடிவில் ஹதராபாத் அணி 207 ரன்கள் குவித்தது.

பஞ்சாப் கேப்டன் மேக்ஸ்வெல் 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகள் விழ்த்தினார். இதன்பின்னர் 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பஞ்சாப் அணி களமிறங்கியது. அதிரடியாக விளையாடிய மார்ஸ் 50 பந்துகளில் 84 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார் மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் அவட்டாகி வெளியேறியதால் பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் மட்டும் எடுத்தது. இதனால் 26 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது.

ஹைதராபாத் அணியில் நெக்ரா மற்றும் கவுல் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். அந்த அணியின் ரஷித் கான் 4 ஓவர்கள் வீசி 16 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார். ரஷித் கானுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

Story first published: Saturday, April 29, 2017, 3:41 [IST]
Other articles published on Apr 29, 2017
English summary
Defending champions Sunrisers Hyderabad (SRH) posted a mammoth 207/3 against Kings XI Punjab at Mohali in the league game of IPL 2017.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X