For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நான் எந்தத் தப்பும் செய்யலையே எஜமான்.. ரெய்னா

டெல்லி: லலித் மோடி கூறியவை அனைத்தும் தவறு. நான் எந்தத் தவறையும் செய்யவில்லை, செய்யவும் மாட்டேன் என்று சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.

ஐபிஎல் தொடரின்போது தொழிலதிபர் ஒருவரிடமிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களான சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா மற்றும் வேயன் பிராவோ ஆகியோர் பணம் வாங்கியதாக குற்றம் சாட்டியிருந்தார் லலித் மோடி. இதுதொடர்பாக அவர் ஐசிசிக்கு அனுப்பிய கடிதம் சமீபத்தில் லீக் ஆனது.

ஆனால் இந்தக் குற்றச்சாட்டை ரெய்னா மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:

நான் குற்றமற்றவன்

நான் குற்றமற்றவன்

என்னைப் பற்றி ஊடகங்களில் வந்த செய்தியால் எனது ரசிகர்கள் பெரும் கவலையடைந்துள்ளனர். அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவதெல்லாம் நான் ஒரு தவறும் செய்யவி்ல்லை. இதை திட்டவட்டமாக கூறிக் கொள்கிறேன்.

ஒழுங்கு தவறாதவன்

ஒழுங்கு தவறாதவன்

நான் ஒழுங்கு தவறாதவன். சரியான முறையிலேயே போட்டிகளை ஆடினேன். எந்தத் தவறையும் நான் செய்யவில்லை. தவறான எந்த வேலையிலும் நான் ஈடுபட்டதில்லை.

பொய்யானவை

பொய்யானவை

என் மீதான அனைத்துப் புகார்களும் தவறானவை, பொய்யானவை. ஆதாரமில்லாதவை. கிரிக்கெட் விளையாடுவது எனது லட்சியம். எந்த அணிக்காக ஆடுகிறேனோ அந்த அணிக்காக அர்ப்பணிப்புடன் விளையாடுகிறேன்.

வழக்குத் தொடருவேன்

வழக்குத் தொடருவேன்

என்னைப் பற்றி கூறப்பட்ட புகார்கள் தொடர்பாக சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுப்பது குறித்து யோசித்து வருகிறேன். நிச்சயம் அதைச் செய்வேன் என்று ரெய்னா கூறியுள்ளார்.

Story first published: Friday, July 3, 2015, 9:01 [IST]
Other articles published on Jul 3, 2015
English summary
Rejecting Lalit Modi's allegations that he accepted bribes from a businessman, Indian cricketer Suresh Raina today said he is considering legal action against the former IPL Commissioner and insisted that he was never involved in any wrongdoing.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X