For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உண்மை... உலக கோப்பையை ஜெயிக்க தகுதியில்லாத அணிதான் தென் ஆப்பிரிக்கா!

By Veera Kumar

ஆக்லாந்து: நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா தோற்க மழையும், அதிருஷ்டமின்மையும் மட்டும் காரணமில்லை என்பது தென் ஆப்பிரிக்க அணியின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்தவர்களுக்கு நன்கு தெரியும். தென் ஆப்பிரிக்காவின் தோல்விக்கு அவர்களே முழு காரணமும் ஆகும்.

தென் ஆப்பிரிக்கா தோற்றதும், இந்தியாவிலேயே பல ரசிகர்கள் அந்த அணிக்காக கண்ணீர் சிந்தினர். உண்மையிலேயே நீங்கள்தான் சாம்பியன் என்று கூறி பலரும் பேஸ்புக்கில் டி வில்லியர்ஸ் அழும் படத்தை வைத்து ஆறுதல் கூறி வருகின்றனர்.

ஆனால், உண்மையிலேயே இவ்வளவு போற்றுதலுக்கும் உள்ள அணிதானா தென் ஆப்பிரிக்கா என்றால், இல்லை என்றுதான் மனதை கல்லாக்கிக் கொண்டு சொல்ல வேண்டியுள்ளது.

என்னா பில்டப்

என்னா பில்டப்

முதலில் தென் ஆப்பிரிக்க பவுலிங் குறித்து உருவாக்கப்பட்டிருந்த மாபெரும் பிம்பம் உடைக்கப்பட்டுள்ளது இந்த உலக கோப்பையில். ஸ்டெய்ன் வீசும் பந்து ஸ்ட்ரெயிட்டாக சந்திரனுக்கே சென்று விடும் என்ற அளவுக்கு ஆஹா..ஓஹோ புகழாரங்கள். ஆனால் நிலைமை என்ன.. ஜிம்பாப்வே அணி லீக் ஆட்டத்தில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக குவித்த ரன்கள் 277.

கலவை கிடையாது

கலவை கிடையாது

இதற்கு காரணம், தென் ஆப்பிரிக்காவின் பவுலர்களின் பந்து வீசும் ஸ்டைல் முழுக்க, முழுக்க ஒரே மாதிரி உள்ளதுதான். வேகப்பந்து யூனிட்டில் வரைட்டி இல்லை. எனவேதான், ஸ்பின்னர் இம்ரான் தாஹிர் 'கிளிக்' ஆகிய போட்டிகளில் தென் ஆப்பிரிக்காவால் எளிதாக வெல்ல முடிந்தது. மற்றபடி, வேகப்பந்து வீச்சு அடித்து நொறுக்கப்பட்டது. டேல் ஸ்டெய்ன் தனது சிறந்த பந்து வீச்சை காலிறுதியில், இலங்கைக்கு எதிரான போட்டியில் மட்டுமே வெளிப்படுத்தினார்.

இங்கு டி20 மேட்ச் நடக்கலை

இங்கு டி20 மேட்ச் நடக்கலை

மிடில் ஆர்டரில் ஜேக் கல்லீஸ் போன்ற ஒரு பொறுமையும், திறமையும் கலந்த பேட்ஸ்மேன் இப்போது இல்லை. யாரை பார்த்தாலும் டி20 வீரர்களை போலவே உள்ளனர். வருவதும், ஷாட் அடிப்பதும் மட்டுமே அவர்கள் பணியாக உள்ளது. பொறுமையாக சேஸ் செய்ய வேண்டிய போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா கோட்டை விட்டதை, இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிகளில் பார்த்துள்ளோம்.

ஒருவர் மீது ஓவர் பாரம்

ஒருவர் மீது ஓவர் பாரம்

தென் ஆப்பிரிக்க பேட்டிங் முழுக்க டி வில்லியர்சை மட்டுமே நம்பிக் கொண்டிருந்தது. பாகிஸ்தானிடம் தோற்றபிறகு அதை டி வில்லியர்சே வெளிப்படையாக கூறினார். என்னால் மட்டும் உலக கோப்பையை வென்று தர முடியாது என்று வேதனை வெளிப்படுத்தியிருந்தார் டி வில்லியர்ஸ். பெயரை கேட்டாலே அதிரும் வகையில் பேட்ஸ்மேன்கள் இருந்தாலும், நுணுக்கமாக ஆடாமல், வெறித்தனமாக ரன் அடிப்பதிலேயே தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் கவனம் இருந்தது.

கோர்ஸ் வேணும்

கோர்ஸ் வேணும்

பதற்றமான நேரத்தில் எப்படி ஆட வேண்டும் என்பதற்கு, ஆஸ்திரேலியர்களிடமோ அல்லது டோணியிடமோ தென் ஆப்பிரிக்கர்கள், 6 மாதம் கரஸ்பாண்டன்ட் கோர்ஸ் படித்தாலும் தேவலை எனலாம். ஆதிமுதலே தென் ஆப்பிரிக்கர்களுக்கு இதுதான் பிரச்சினை.

கோட்டை விட்டனர்

கோட்டை விட்டனர்

தலை சிறந்த ஃபீல்டரான டி வில்லியர்ஸ் கூட, பதற்றத்தில் பந்தை விட்டுவிட்டு வெறுங்கையில் ஸ்டம்பை அடித்ததையும், முழு நேர விக்கெட் கீப்பர் டி காக், அதேபோல வெறுங்கையில் முழம் போட்டதையும் பார்த்த ரசிகர்கள் கோபத்தின் உச்சிக்கே சென்றனர். அப்படி என்னதான் பதற்றமோ அந்த அணிக்கு மட்டும் புரியவில்லை. மறுமுனையில் பார்த்தால் எலியட் முகத்தில் எள்ளளவும் பதற்றமோ, உணர்ச்சிவசமோ இல்லை என்பைத போட்டியை பார்த்தவர்கள் நன்கு உணர்வர். எது எப்படியோ, அட்லீஸ்ட் இந்த பதற்றத்தை கட்டுப்படுத்தினாலாவது 2019ல் தென் ஆப்பிரிக்கா உலக கோப்பைக்கு ட்ரை பண்ணலாம்.

Story first published: Wednesday, March 25, 2015, 14:36 [IST]
Other articles published on Mar 25, 2015
English summary
lot of sympathy is flowing in South Africa's favour after the team got knocked out from the 2015 World Cup at the Eden Park in Auckland on Tuesday.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X