For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

6/6 ஆஸ்திரேலியா.. 0/6 நியூசிலாந்து.. அச்சுறுத்தும் அரையிறுதி சென்டிமென்ட்!!

By Veera Kumar

சிட்னி: ஆஸ்திரேலியா இதுவரை எந்த ஒரு உலக கோப்பை அரையிறுதி போட்டியிலும் தோற்றதே கிடையாது என்பதைப்போலவே, நியூசிலாந்து இதுவரை எந்த ஒரு உலக கோப்பை அரையிறுதியிலும் வெற்றி பெற்றதே கிடையாது.

நடப்பு உலக கோப்பையில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி நியூசிலாந்தும், பாகிஸ்தானை விரட்டி, ஆஸ்திரேலியாவும் அரையிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளன.

இரு அணிகளுக்கும் 7வது

இரு அணிகளுக்கும் 7வது

இவ்விரு அணிகளுமே, உலக கோப்பையில் இதுவரை 6 முறை அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. நடப்பு உலக கோப்பையில், ஏழாவது முறையாக இவ்விரு அணிகளும் இம்முறை அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

ஆஸ்திரேலியா ஆக்ரோஷம்

ஆஸ்திரேலியா ஆக்ரோஷம்

இருப்பினும் இரு அணிகளுக்கு நடுவே பெரும் வேற்றுமை ஒன்று உள்ளது. அரையிறுதிக்கு பிறகுதான் ஆஸ்திரேலியா முன்னைவிட ஆக்ரோஷமாக ஆடக்கூடிய அணியாகவும், அரையிறுதிக்கு பிறகுதான் நடுக்கம் காணும் அணியாக நியூசிலாந்து இருப்பதும் புள்ளி விவரங்கள் மூலம் நன்கு பட்டவர்த்தனமாகிறது.

4 முறை சாம்பியன்

4 முறை சாம்பியன்

ஏனெனில் இதுவரை அரையிறுதிக்கு தகுதி பெற்ற அனைத்து போட்டிகளிலுமே, ஆஸ்திரேலியா, இறுதி போட்டிக்குள்ளும் சென்றுள்ளது. இறுதி போட்டியில் 4 முறை வெற்றி பெற்றுள்ளது. இருமுறை தோற்றுள்ளது.

நியூசிலாந்து சொதப்பல்

நியூசிலாந்து சொதப்பல்

நியூசிலாந்தை பொறுத்தளவில், இதுவரை 6 அரையிறுதியிலுமே தோல்வியுற்றுள்ளது.

ஆஸ்திரேலியாவின் அரையிறுதி பிளாஸ் பேக்:

ஆஸ்திரேலியாவின் அரையிறுதி பிளாஸ் பேக்:

*1975ம் ஆண்டு முதல் உலக கோப்பை தொடரின்போது இங்கிலாந்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா. இங்கிலாந்து எடுத்த 93 ரன்களை 6 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா எட்டிப்பிடித்து பைனலுக்குள் சென்று வெஸ்ட் இண்டீசிடம் தோற்றது.

*1987 உலக கோப்பையின்போது, பாகிஸ்தானை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா.

*1996ல் வெஸ்ட் இண்டீசை 5 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வீழ்த்தியது.

*1999 அரையிறுதியில், தென் ஆப்பிரிக்காவுடனான போட்டி டை ஆனபோதிலும், ரன் ரேட் அடிப்படையில் ஆஸ்திரேலியா பைனலுக்கு முன்னேறி கோப்பையை கைப்பற்றியது.

*2003ல் இலங்கையை, டக்ஒர்த் லூவிஸ் முறையில் 48 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது ஆஸ்திரேலியா.

*2007 உலக கோப்பையில், தென் ஆப்பிரிக்காவை எளிதாக வீழ்த்தியது ஆஸ்திரேலியா.

நியூசிலாந்தின் பிளாஸ் பேக் ரொம்ப மோசம்

நியூசிலாந்தின் பிளாஸ் பேக் ரொம்ப மோசம்

*1975ம் ஆண்டு முதல் உலக கோப்பையிலேயே வெஸ்ட் இண்டீசிடம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்றது.

*1979ம் ஆண்டு உலக கோப்பையின்போது 9 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோற்றது.

*1992ல், பாகிஸ்தானிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. அந்த போட்டி நடந்த அதே ஆக்லாந்தில்தான், நடப்பு உலக கோப்பையில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது நியூசிலாந்து.

*1999 உலக கோப்பையில், பாகிஸ்தானிடம் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்றது நியூசிலாந்து.

*2007 உக கோப்பையில், இலங்கையிடம் 81 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

*2011 உலக கோப்பையிலும், இலங்கையிடம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்றது நியூசிலாந்து.

Story first published: Monday, March 23, 2015, 17:18 [IST]
Other articles published on Mar 23, 2015
English summary
It is a tale of contradiction for the two co-hosts of the ICC World Cup 2015. Both Australia and New Zealand, the two hosts of the ongoing World Cup made their seventh World Cup semi-finals by winning against Pakistan and the West Indies, respectively, but the record books have more mentions about the Australians because they have been the more successful from the semi-final stage onwards of the World Cup.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X