For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மார்ச் மாதத்தில் இந்தியாவிடம் வங்கதேசம் தோற்றதே இல்லை: அப்போ இன்று?

By Siva

டாக்கா: மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடக்கும் காலிறுதிப் போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெறும் என்று அந்நாட்டு மக்களும், கிரிக்கெட் வாரியத்தினரும்நம்புகிறார்கள்.

உலகக் கோப்பை போட்டிகளி்ல் டோணி தலைமையிலான இந்திய அணி இதுவரை தான் விளையாடிய 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் இந்தியா, வங்கதேச அணிகள் மோதும் காலிறுதிப் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது.

இன்றைய போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெறும் என அந்நாட்டு ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வாரியத்தினர் நம்புகிறார்கள்.

இரண்டு முறை

முன்னதாக இந்தியா, வங்கதேச அணிகள் இரண்டு முறை மார்ச் மாதத்தில் மோதியுள்ளன. இரண்டு முறையுமே வங்கதேச அணி தான் வெற்றி வெற்றுள்ளது. அதனால் இன்றைய போட்டியிலும் தாங்கள் வெற்றி பெறுவோம் என்று நினைக்கிறது வங்கதேசம்.

உலகக் கோப்பை

உலகக் கோப்பை

2007ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை போட்டிகளில் மார்ச் மாதம் 17ம் தேதி மேற்கிந்திய தீவுகளில் உள்ள போர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் இந்தியா, வங்கதேச அணிகள் மோதின. இதில் யாரும் எதிர்பாராவிதமாக வங்கதேச அணி இந்தியாவை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

ஆசிய கோப்பை

ஆசிய கோப்பை

2012ம் ஆண்டு மார்ச் மாதம் 16ம் தேதி நடந்த ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா, வங்கதேச அணிகள் மோதின. அந்த போட்டியில் இந்திய அணியை வங்கதேசம் தோற்கடித்தது.

டோணி

டோணி

மார்ச் மாதம் என்ன, எந்த மாதமாக இருந்தாலும் வெற்றி பெறுவோம் என்பதை உலகிற்கு தெரிவிக்குமா டோணி அணி?. பொறுத்திருந்து பார்ப்போம்.

Story first published: Thursday, March 19, 2015, 7:56 [IST]
Other articles published on Mar 19, 2015
English summary
Bangladeshi cricket supporters are hopeful that their team will beat India in the second quarterfinal of the ICC World Cup to be played at the Melbourne Cricket Ground here on Thursday, March 19, 2015.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X