For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இதுவரை 7 அடி.... இந்த முறையாவது சிலிர்க்க முயற்சிக்குமா ஜிம்பாப்வே?

பெங்களூரு: இந்தியா, ஜிம்பாப்வே இடையிலான உலகக் கோப்பைப் போட்டி ஆக்லாந்தில், மார்ச் 14ம் தேதி நடக்கும்போது பேவரைட்டாக இந்தியா களம் புகும். இதுவரை இரு அணிகளும் உலகக் கோப்பையில் 8 முறை மோதியுள்ளன. அதில் 7 முறை இந்தியாதான் ஜெயித்துள்ளது.

பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்த இரு அணிகளும் தற்போது 9வது முறையாக களம் காணவுள்ளன.

தென் ஆப்பிரிக்காவையே திணறடித்த அணி ஜிம்பாப்வே. அதேபோல மேற்கு இந்தியத் தீவுகளையும் கூட சற்று மிரட்டிப் பார்க்கத் தவறவில்லை. எனவே இந்தியா நிறைய உஷாராக ஆட வேண்டியது அவசியம்.

1983 முதல்

1983 முதல்

1983ம் ஆண்டு முதல் இரு அணிகளும் இதுவரை 8 முறை உலகக் கோப்பையில் மோதியுள்ளன. ஜிம்பாப்வே 1983ம் ஆண்டுதான் முதல் முறையாக உலகக் கோப்பைப் போட்டியில் அறிமுகமானது. இதில் 7 முறை இந்தியாவே வென்றுள்ளது.

கபில்தேவிடம் சிக்கி சிதைந்த ஜிம்பாப்வே

கபில்தேவிடம் சிக்கி சிதைந்த ஜிம்பாப்வே

கபில்தேவிடம் சிக்கி சிதைந்த அனுபவம் ஜிம்பாப்வேவுக்கு உண்டு. 1983 உலகக் கோப்பைத் தொடரின்போது 2வது போட்டியில் இந்தியாவும், ஜிம்பாப்வேவும் மோதின. அப்போது இந்திய அணி பேட்டிங்கின்போது 5 விக்கெட்களை இழந்து 17 ரன்களில் தவித்தபோது களம் இறங்கிய கபில் தேவ் புயல் வேகத்தில் ஆடி 175 ரன்களைக் குவித்து இந்தியாவை கரை சேர்த்தார்.

1999ம் ஆண்டு மட்டுமே

1999ம் ஆண்டு மட்டுமே

1999 உலகக் கோப்பைப் போட்டியின்போது மட்டும்தான் இந்தியாவை, ஜிம்பாப்வே வீழ்த்தியது. அப்போட்டியில் 3 ரன் வித்தியாசத்தில்தான் ஜிம்பாப்வே வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் மோதல்

முதல் மோதல்

1983ம் ஆண்டு லீசெஸ்டர் நகரில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது. ஜிம்பாப்வே 155, 51.4 ஓவர்களில். இந்தியா 157/5, 37.3 ஓவர்களில்.

2வது மோதல்

2வது மோதல்

1983 போட்டித் தொடரில் டர்ன்பிரிட்ஜ் வெல்ஸில் நடந்த போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி. இந்தியா 60 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள். ஜிம்பாப்வே 57 ஓவர்களில் 235 ரன்களுக்கு ஆல் அவுட்.

3வது மோதல்

3வது மோதல்

1987ம் ஆண்டு மும்பையில் நடந்த போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி. ஜிம்பாப்வே 44.2 ஓவர்களில் 135 ரன்கள். இந்தியா 27.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 136.

4வது மோதல்

4வது மோதல்

1987ல் அகமதாபாத்தில் நடந்த போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி. ஜிம்பாப்வே 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள். இந்தியா 42 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள்.

5வது மோதல்

5வது மோதல்

1992ல் ஹாமில்டனில் நடந்த போட்டியில் 55 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. இந்தியா 32 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள். ஜிம்பாப்வே 19.1 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 104.

6வது மோதல்

6வது மோதல்

1996ல் கான்பூரில் நடந்த போட்டியில் 40 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. இந்தியா 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 245. ஜிம்பாப்வே 49.4 ஓவர்களில் 207 ரன்கள்.

7வது மோதல்

7வது மோதல்

1999ம் ஆண்டு லீசெஸ்டர் போட்டியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே வெற்றி பெற்றது. ஜிம்பாப்வே 50 ஓவர்களில் 252 ரன்கள். இந்தியா 45 ஓவர்களில் 249.

ஹராரேவில் கடைசி வெற்றி

ஹராரேவில் கடைசி வெற்றி

கடைசியாக 2003 உலகக் கோப்பைப் போட்டியின்போது ஹராரேவில் நடந்த போட்டியில் இந்தியா, ஜிம்பாப்வேயை 83 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அதில் இந்தியா 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்தது. ஜிம்பாப்வே அணி 44.4 ஓவர்களில் 172 ரன்கள் எடுத்துத் தோல்வியுற்றது.

Story first published: Wednesday, March 4, 2015, 12:04 [IST]
Other articles published on Mar 4, 2015
English summary
India have beaten the Zimbabwe for 7 times in the WC history and both the teams are meeting for 9th time in this WC at Auckland on March 13.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X