For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"பேடே" இல்லாமல் "கீப்பிங்" செய்த கேப்டன் டோணி.. "சில்லி" காரணத்திற்காக!!

பெர்த்: ரொம்ப வினோதமாக இருந்தது அந்தக் காட்சி. கேப்டன் டோணி, இன்று பேட் கட்டிக் கொள்ளாமல் சில பந்துகளுக்கு கீப்பிங் செய்து அனைவரின் கவனத்தையும் கவர்ந்தார்.

எல்லாம் சில்லித்தனமான காரணத்திற்காகத்தான்.. பயந்துடாதீங்க.. சில்லி பாயிண்ட்டில் பீல்டிங் செய்த அஜிங்கியா ரஹானேவுக்காக தனது பேடைக் கழற்றிக் கொடுத்து விட்டு தான் வெறும் காலுடன் கீப்பிங் செய்தார் டோணி.

WC 2015: MS Dhoni keeps without pads against West Indies

அஸ்வின் பந்து வீசியபோதுதான் இப்படி பேடைக் கழற்றி ரஹானேவிடம் கொடுத்தார் டோணி. இதுபோல கீப்பர்கள் பேடே இல்லாமல் கீப்பிங் செய்வது என்பது அரிதிலும் அரிதான விஷயம் என்பதால் இது கவனம் ஈர்ப்பதாக அமைந்தது.

அஸ்வின் வீசிய, 14வது ஓவரின் நடுவில்தான் இந்த காமெடி நடந்தது. அஸ்வின் வீசிய பந்து பவுன்ஸ் ஆவதைப் பார்த்த டோணி, சில்லியில் மிக நெருக்கத்தில் பீல்டரை வைத்து பேட்ஸ்மேனுக்கு நெருக்கடி கொடுக்கத் தீர்மானித்தார். ஆனால் ரஹானேவை பேட் இல்லாமல் நிற்பது ரிஸ்க்கானது என்பதால் புதிய பேடை வரவழைக்க நடுவரிடம் அனுமதி கேட்டார் டோணி. ஆனால் நடுவர் அனுமதி தரவில்லை.

இதையடுத்து தனது தற்காப்பு பேடைக் கழற்றி அவரை அணிந்து கொள்ளச் செய்தார். அதன் பின்னர் அஸ்வின் தொடர்ந்து பந்து வீசினார். இருப்பினும் அஸ்வின் வீசிய ஒரு பந்து டோணியைத் தாண்டி ஓடியது. இதையடுத்து தனக்கு வலது பக்கமாக 15 மீட்டர் தொலைவில் ரெய்னாவை நிறுத்தி அதற்கும் வழி செய்தார் டோணி.

அந்த ஓவர் முடிந்ததும் சப்ஸ்டிடியூட் வீரர் வந்து புதிய பேடை கொடுக்க நடுவர் அனுமதித்தார். இதையடுத்து ரஹானே புதிய பேடைக் கட்டிக் கொள்ள டோணி தனது பேடை வாங்கிக் கொண்டார்.

Story first published: Friday, March 6, 2015, 18:15 [IST]
Other articles published on Mar 6, 2015
English summary
Once again bringing his street-smart side to the fore, Indian captain Mahendra Singh Dhoni kept for a few deliveries without pads as he gave his gear to Ajinkya Rahane standing at silly mid-off against Ravichandran Ashwin in the World Cup match against West Indies here today. It was one of the rarest of instances, when a wicketkeeper kept wickets without wearing the protection for legs.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X