For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் ரேசில் நாங்கள் இல்லை.. விராட் கோஹ்லி விரக்தி

By Karthikeyan

புனே: புனே அணிக்கெதிரான தோல்விக்குப்பின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கேப்டன் விராட் கோஹ்லி கருத்து கூறியுள்ளார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணிகளுக்கு இடையிலான போட்டி புனேயில் நேற்று இரவு நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த புனே அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது.

We are not in the race for playoffs, says RCB captain Virat Kohli

பின்னர் ஆடிய பெங்களூரு அணி 20 ஒவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. விராட் கோலி ஒருவர் மட்டுமே நிலைத்து நின்று 48 பந்தில் 55 ரன்கள் சேர்த்தார். இதனால் புனே அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த தோல்வியில் மூலம் ஏறக்குறையை பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்துள்ளது பெங்களூரு அணி. இந்நிலையில் ஆட்டம் முடிந்து பின்னர் பேசிய விராட் கோஹ்லி, என்ன நடந்தது என்பதை அனைவரும் பார்த்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். இப்படிப்பட்ட ஒரு ஆட்டத்தை ஆடிவிட்டு இங்கு நின்று பேசுவது கடினமாக இருக்கிறது.

பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் ரேசில் நாங்கள் இல்லை. மீதியுள்ள 4 ஆட்டங்களையும் முடிவுகள் பற்றி கவலைப்படாமல் மகிழ்வுடன் ஆட வேண்டியதுதான்.

நாங்கள்தான் போட்டியைத் தோற்றோமே தவிர அவர்கள் வெல்லவில்லை, இது போன்ற அனுபவங்களிலிருந்து கற்றுக் கொண்டு அடுத்தக் கட்டத்துக்கு நகர வேண்டும்.

அணியின் மோசமான ஆட்டத்துக்கு சில காரணங்கள் இருக்கலம். கடந்த ஆண்டு பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய சிறந்த பேட்டின் அணி என்றே எங்களை ரசிகர்கள் நோக்கினர். தோல்விக்கு குறிப்பிட்ட காரணத்தை சுட்ட முடியவில்லை, அவுட் ஆவதற்கு தயக்கமாக இருக்கலாம் ரன்கள் எடுக்க தயக்கமாக இருக்கலாம் என்று கூறினார் விராட் கோஹ்லி.

Story first published: Sunday, April 30, 2017, 20:50 [IST]
Other articles published on Apr 30, 2017
English summary
Royal Challengers Bangalore skipper Virat Kohli conceded that they are all but out of the race for playoffs in IPL 2017.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X