For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நிறைய கத்துக்கலாம்.. கும்ப்ளேவின் "ரசிகர்" முரளி விஜய் குதூகலப் பேட்டி!

பெங்களூரு: நான் அனில் கும்ப்ளேவின் ரசிகர். அடுத்த ஒரு வருடத்திற்கு இந்திய அணிக்கு அட்டகாசமான நாட்களாக அமையும். கும்ப்ளேவிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ள முடியும் என்று தொடக்க ஆட்டக்காரர் முரளி விஜய் கூறியுள்ளார்.

கும்ப்ளேவிடமிருந்து கற்றுக் கொள்ள வீரர்களுக்குக் கிடைத்துள்ள பொன்னான வாய்ப்பு இது என்றும் முரளி விஜய் கூறியுள்ளார். எனது முதல் டெஸ்ட் போட்டிதான், கும்ப்ளேவுக்குக் கடைசி டெஸ்ட் போட்டி. எனவே என்னால் கும்ப்ளேவை மறக்க முடியாது என்றும் முரளி விஜய் கூறினார்.

இந்திய அணி தற்போது பெங்களூரில் பயிற்சி முகாமில் ஈடுபட்டுள்ளது. இன்று 2வது நாள் பயிற்சி நடந்தது. பயிற்சியின்போது செய்தியாளர்களிடம் முரளி விஜய் பேசினார். அவரது பேச்சிலிருந்து...

முதலும், முடிவும்

முதலும், முடிவும்

எனது முதல் டெஸ்ட் போட்டிதான், கும்ப்ளேவுக்குக் கடைசி டெஸ்ட் போட்டி. எனவே என்னால் அப்போது அவருடன் நிறைய நேரம் செலவிட முடியவில்லை. ஆனால் இளம் வயதிலிருந்தே நான் கும்ப்ளேவின் தீவிர ரசிகர்.

பொன்னான வாய்ப்பு

பொன்னான வாய்ப்பு

இப்போது இளம் தலைமுறை வீரர்களுக்கு பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது. அடுத்த ஒரு வருடத்திற்கு நம்முடன் இருக்கப் போகிறார் கும்ப்ளே. அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ளலாம்.

கிரேட் காம்பினேஷன்

கிரேட் காம்பினேஷன்

கும்ப்ளே - கோஹ்லி காம்பினேஷன் குறித்து இப்போதே பதிலளிக்க முடியாது. அது நியாயமாக இருக்காது. ஆனால் நிச்சயம் அடுத்த 12 மாதமும் கிரேட்டாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

சாஸ்திரி

சாஸ்திரி

ரவி சாஸ்திரி இயக்குநராக இருந்தபோது அவரிடமிருந்தும் நிறைய கற்றுக் கொண்டோம். தற்போது கும்ப்ளேவிடமிருந்தும் நிறைய கரற்றுக் கொள்ள முயற்சிப்போம் என்றார் முரளி விஜய்.

Story first published: Thursday, June 30, 2016, 15:23 [IST]
Other articles published on Jun 30, 2016
English summary
India opening batsman Murali Vijay is a big fan of newly appointed head coach Anil Kumble and says the players have got a golden opportunity to learn from the great leg-spinner. "My first Test match was his last Test match and actually I did not spend lot of time with him, but I have been a great fan of him as an youngster," he told reporters on the second day of the India camp at the KSCA stadium here today.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X