For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரஜினியா கமலா.. விஜய்யா அஜீத்தா... அஸ்வினா ஹர்பஜனா.. முடிவே இல்லாத பயணம் இது!

சென்னை: அந்தக் காலத்தில் பாகவதர் - சின்னப்பா ஒப்பீடு பட்டையைக் கிளப்பியது. பின்னர் எம்ஜிஆர் சிவாஜி, ரஜினி கமல், பிறகு விஜய் அஜீத்.. இது சினிமா பஞ்சாயத்து.. அதேபோல கிரிக்கெட்டிலும் ஒரு ஒப்பீட்டு வரிசை தொடர்ந்து இருந்து வருகிறது. கவாஸ்கர் கபில்தேவ், சச்சின் கோஹ்லி என்று தொடரும் அந்த வரிசையில் தற்போது லேட்டஸ்டாக பற்றி எரிந்து வருகிறது அஸ்வின் - ஹர்பஜன் சிங் குறித்த ஒப்பீடு.

டிவிட்டரிலும், பேஸ்புக்கிலும் இவர்களை ஒப்பிட்டும், யார் ஒசத்தி என்று விவாதம் நடத்தியும் ரசிகர்கள் இரு பிரிவாக பிரிந்து பிரித்து மேய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

உண்மையில்தான் இவர்களில் யார் பெஸ்ட் என்ற கேள்வியும், கியூரியாசிட்டியும் எழாமல் இல்லை. ஆனால் ஆரோக்கியமான முறையில் இதைப் பார்த்தால் இரு வீரர்களுக்குமே அது கெளரவம் சேர்க்கும்.. காரணம், கடைசியில் இருவருமே சிறந்த பந்து வீச்சாளர்கள் என்பதால்.

வாங்க நாமளும் ஒப்பிட்டுப் பார்க்கலாம்...

ஆப் பிரேக்

ஆப் பிரேக்

ஹர்பஜனும் சரி, அஸ்வினும் சரி இருவருமே வலது கை பேட்ஸ்மேன்கள், ஆப் பிரேக் பவுலர்கள். இருவரது பந்து வீச்சு முறையிலும் பெரிய அளவில் வித்தியாசம் இருக்காது. ஆனால் இருவரிடமும் சில ஸ்பெஷாலிட்டிகள் உள்ளன.

ஹர்பஜனுக்கு தூஸ்ரா.. அஸ்வினுக்கு கேரம்

ஹர்பஜனுக்கு தூஸ்ரா.. அஸ்வினுக்கு கேரம்

தூஸ்ரா வகை பந்து வீச்சை ஹர்பஜன் சிங் அதிகம் போடுவார். அது அவரது ஸ்பெஷாலிட்டியும் கூட. அதேசமயம், கேரம் பால் வகை பந்து வீச்சில் அஸ்வின் கில்லாடி. இதை இலங்கை ஸ்பின்னர் அஜந்தா மெண்டிஸிடமிருந்துதான் கற்றார் அஸ்வின். ஆனால் இன்று மெண்டிஸை மிஞ்சும் அளவுக்கு சிறப்பாக அதில் தேறி விட்டார்.

சிறந்த ஆல் ரவுண்டர்

சிறந்த ஆல் ரவுண்டர்

உலகின் தலை சிறந்த ஆல் ரவுண்டர்கள் வரிசையில் அஸ்வினுக்கும் இடம் உண்டு. பந்து வீச்சைப் போலவே பேட்டிங்கிலும் பல சமயங்களில் ஜொலித்துள்ளார் அஸ்வின். அதேசமயம், ஹர்பஜன் சிங் முழுமையான சுழற்பந்து வீச்சாளராக மட்டுமே இருந்துள்ளார். எப்போதாவது பேட்டிங்கிலும் கலக்கியது உண்டு.

ஹர்பஜன் 53 - அஸ்வின் 39

ஹர்பஜன் 53 - அஸ்வின் 39

ஹர்பஜன் சிங் மொத்தம் 53 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார். அஸ்வின் 39 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் ஹர்பஜன் 75 இன்னிங்ஸ்களிலும், அஸ்வின் 55 இன்னிங்ஸ்களிலும் ஆடியுள்ளனர். ஹர்பஜன் சிங் 67 முறை அவுட்டாகியுள்ளார். அஸ்வின் 45 முறை. 10 முறை அஸ்வின் அவுட்டாகாமல் இருந்துள்ளார். ஹர்பஜன் 8 முறை.

பெஸ்ட் அஸ்வின்

பெஸ்ட் அஸ்வின்

டெஸ்ட் பேட்டிங்கில் ஹர்பஜனை விட அஸ்வினே பல விஷயங்களில் கை ஓங்கிய நிலையில் உள்ளார். அதிக அஸ்வின் இதுவரை 1510 ரன்கள் எடுத்துள்ளார். ஹர்பஜன் சிங்கின் பங்கு 1384. உயர்ந்த ஸ்கோர் அஸ்வினுக்கு 124, ஹர்பஜனுக்கு 115. ஆனால் பேட்டிங் சராசரி ஹர்பஜனுக்கே அதிகம். அவர் 62.62. அஸ்வின் 55.25.

அஸ்வின் சதம் அதிகம்

அஸ்வின் சதம் அதிகம்

டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் போட்டவர் அஸ்வின்தான். மொத்தம் 4 சதம் அடித்துள்ளார். ஹர்பஜன் சிங் 2 சதங்கள் போட்டுள்ளார். அரை சதம் வரிசையில் அஸ்வின் 6ம், ஹர்பஜன் சிங் 7 அரை சதமும் போட்டுள்ளனர். டெஸ்ட் போட்டிகளில் ஹர்பஜன் சிங் அதிக சிக்ஸர்கள் அடித்துள்ளார். அதாவது 28. அஸ்வின் பங்கு 11. ஆனால் அஸ்வின் தான் அதிக பவுண்டரி விளாசியுள்ளார், மொத்தம் 163. ஹர்பஜன் பங்கு 159.

ஒரு நாள் போட்டியில்

ஒரு நாள் போட்டியில்

ஒரு நாள் போட்டிகளில் அஸ்வின் மொத்தம் 95 போட்டிகளில் ஆடி 658 ரன்கள் எடுத்துள்ளார். இதில் நாட் அவுட் 18 முறை. ஹர்பஜன் சிங் 113 போட்டிகளில் ஆடி 17 நாட் அவுட்டுடன், 688 ரன்கள். அஸ்வினின் பேட்டிங் சராசரி 16.87, ஹர்பஜன் சிங் 13.76. ஸ்டிரைக் ரேட் அஸ்வினுக்கு அதிகம். அதாவது 86.80 சதவீதம். ஹர்பஜன் சிங் 77.74.

அஸ்வின் மட்டுமே அரை சதம்

அஸ்வின் மட்டுமே அரை சதம்

ஒரு நாள் போட்டிகளில் இருவரும் சதம் அடித்ததில்லை. அதேசமயம், அஸ்வின் மட்டும் ஒரு அரை சதம் போட்டுள்ளார். அதிக முறை டக் அவுட் ஆனது ஹர்பஜன் சிங், 9. அஸ்வின் பங்கு 7. இருவரில் அதிக பவுண்டரி விளாசியது அஸ்வின், 59. ஹர்பஜன் சிங் 42 விளாசியுள்ளார். ஆனால் அதிக சிக்ஸர் வெளுத்தது பஜ்ஜிதான். 21 சிக்ஸர்களை அடித்துள்ளார். அஸ்வின் பங்கு 5தான்.

டி20 போட்டிகளில்

டி20 போட்டிகளில்

அஸ்வினும் சரி, ஹர்பஜனும் சரி டி20 போட்டிகளில் கிட்டத்தட்ட சம பலத்தில் உள்ளனர். ஹர்பஜன் 27 போட்டிகளில் ஆடியுள்ளார். அஸ்வின் 45. ஹர்பஜன் 108 ரன்களும், அஸ்வின் 112 ரன்களும் எடுத்துள்ளனர். அதிகபட்ச ஸ்கோர் ஹர்பஜனுக்கு 21, அஸ்வினுக்கு 31. ஸ்டிரைக் ரேட் ஹர்பஜனுக்கு 124, அஸ்வினுக்கு 108 ஆக உள்ளது. இருவரும் சதமோ, அரை சதமோ போட்டதில்லை.

பந்து வீச்சில் அஸ்வின் சூப்பர்

பந்து வீச்சில் அஸ்வின் சூப்பர்

பந்து வீச்சைப் பொறுத்தவரை அஸ்வின் சூப்பராக இருக்கிறார். 53 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள ஹர்பஜன் சிங் 198 விக்கெட்களைச் சாய்த்துள்ளார். 39 போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ள அஸ்வின் வீழ்த்தியது 220 ஆகும். அஸவின் சராசரி 24.29. ஹர்பஜனின் சராசரி 37.22.

விக்கெட் வீழ்ச்சியில் அஸ்வின் செம

விக்கெட் வீழ்ச்சியில் அஸ்வின் செம

அஸ்வின் 11 முறை 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார். ஹர்பஜன் சிங் 5 முறை இதைச் செய்துள்ளார். சிறந்த பவுலிங்காக இருவருமாக தலா 7 விக்கெட் சாய்த்துள்ளனர். ஆனால் ரன்களைக் குறைவாக விட்டுக் கொடுத்தது அஸ்வின்தான். அதாவது 59 ரன்கள். ஹர்பஜன் விட்டுக் கொடுத்தது 120 ஆகும்.

ஒரு நாள் போட்டிகளில் அஸ்வின் லீடிங்

ஒரு நாள் போட்டிகளில் அஸ்வின் லீடிங்

ஒரு நாள் போட்டிகளில் 114 போட்டிகளில் ஹர்பஜன் சிங் 127 விக்கெட்களைச் சாய்த்துள்ளார். அஸ்வின் வெறும் 96 போட்டிகளில் 130 விக்கெட்களைச் சாய்த்துள்ளார். அஸ்வின் இதுவரை ஒரு நாள் போட்டிகளில் 5 விக்கெட்களைச் சாய்த்ததில்லை. அதேசமயம், ஹர்பஜன் 2 முறை அதைச் செய்துள்ளார்.

டி20யிலும் அஸ்வினே நம்பர் 1

டி20யிலும் அஸ்வினே நம்பர் 1

சர்வதேச டி20 போட்டிகளிலும் அஸ்வினே நம்பர் ஒன் பவுலராக உள்ளார். ஹர்பஜன் 27 போட்டிகளில் ஆடி 25 விக்கெட் சாய்த்துள்ளார். அஸ்வின் 45 போட்டிகளில் 52 விக்கெட். சராசரி அஸ்வினுக்கு 22.19, ஹர்பஜன் சிங்குக்கு 25.32.

வெளிநாட்டில் பெஸ்ட் அஸ்வின்தான்

வெளிநாட்டில் பெஸ்ட் அஸ்வின்தான்

இந்தியாவில் மட்டும்தான் நமது பந்து வீச்சாளர்கள் பெரிதாக சாதிப்பார்கள். இது நமது சாபக்கேடு. ஆனால் அஸ்வின் வெளிநாடுகளிலும் கலக்கியவர். இந்த விஷயத்திலும் ஹர்பஜன் சிங்கை விட அஸ்வினே பெஸ்ட்டாக உள்ளார். எல்லா நாடுகளிலும் ஹர்பஜனை விட அஸ்வின்தான் சிறப்பான புள்ளிவிவரத்தை வைத்துள்ளார் அஸ்வின். அதிலும் ஆஸ்திரேலியாவில் அசத்தியவர் அஸ்வின் மட்டுமே.

39 டெஸ்ட் போட்டிகளில் அஸ்வினே டாப்

39 டெஸ்ட் போட்டிகளில் அஸ்வினே டாப்

அஸ்வினின் 39 டெஸ்ட் போட்டிகளையும், ஹர்பஜனின் முதல் 39 டெஸ்ட் போட்டிகளுடன் ஒப்பிட்டு ஐந்து ஐந்து போட்டிகளாக ஒப்பிட்டால் அத்தனை போட்டிகளிலும் அஸ்வினே அதிக விக்கெட்களைச் சாய்த்துள்ளது புலப்படும். இது பெரிய விஷயம்.

முன்னணி பேட்ஸ்மேன்கள் பீதி

முன்னணி பேட்ஸ்மேன்கள் பீதி

ஹர்பஜன் சிங் காலத்தில் அவரிடம் திணறிய முன்னணி பேட்ஸ்மேன்களை விட அஸ்வினைப் பார்த்து அலறும் முன்னணி மட்டையாளர்கள் லிஸ்ட் பெரிதாக உள்ளது. டிவில்லியர்ஸ், கனே வில்லியம்சன், சங்கக்கரா, மார்லன் சாமுவேல்ஸ் என பெரிய பெரிய தலைகளே அஸ்வினைப் பார்த்து மிரளும் நிலை இப்போது காணப்படுகிறது. இது இந்தியாவுக்கு மிகப் பெரிய விஷயம்.

புள்ளிவிவரத்தைப் பார்த்தால் யார் பெஸ்ட் என்று தெளிவாகத் தெரியும். ஆனால் இந்திய கிரிக்கெட்டுக்கு இருவருமே மிகப் பெரிய பங்காளர்கள் என்பதில் சந்தேகமில்லை என்பதும் முக்கியமானது.

Story first published: Friday, October 14, 2016, 13:49 [IST]
Other articles published on Oct 14, 2016
English summary
There is a debate in the social media , who is best Ashwin or Harbhajan Singh?. Yes debates have no end in politics and of course in Cricket. Here is a healthy comparison between the two legendary spinners of the nation.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X