For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன்

மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா.

By Mathi

பாங்காங்: மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

பெண்களுக்கான ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பாங்காங்கில் நடைபெற்று வந்தது. மொத்தம் 6 அணிகள் இதில் பங்கேற்றன.

Women's Asia Cup T20: Indian women cricket team defeat Pakistan by 17 runs

கடைசி லீக்கில் தாய்லாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஏற்கனவே இந்திய மகளிர் அணி இறுதிப் போட்டியில் நுழைந்திருந்தது.

இரு அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டி இன்று பாங்காங்கில் நடைபெற்றது. முதலில் விளையாடிய இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 121 ரன்களை எடுத்தது.

இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் அதிகபட்சமாக 73 ரன்களை குவித்தார். பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்புக்கு 104 ரன்களே எடுத்து தோல்வியைத் தழுவியது.

பாகிஸ்தானை 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது. இந்திய அணி 6-வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது.

Story first published: Sunday, December 4, 2016, 14:54 [IST]
Other articles published on Dec 4, 2016
English summary
India Women defeated Pakistan Women by 17 runs in Bangkok, Thailand on Sunday in Women's Asia Cup T20.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X