For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

44 நாட்களில் 3 முறை 400 ரன்களை கடந்த தென் ஆப்பிரிக்கா..! இது என்ன அடியா, இல்லை இடியா?

By Veera Kumar

கான்பெரா: உலக கோப்பை போட்டியில் அடுத்தடுத்த போட்டிகளில் 400 ரன்களை தாண்டி தென் ஆப்பிரிக்கா சாதனை படைத்துள்ளது. கடந்த 44 நாட்களில் அந்த அணி எடுக்கும் 400+ ரன் இதுவாகும்.

உலக கோப்பையில் இன்று நடைபெற்ற அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரி்காக 411 ரன்களை குவித்தது. இதற்கு முன்பு மோதிய மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியிலும் 400 ரன்களை கடந்து சாதித்தது தென் ஆப்பிரிக்கா அணி. அப்போட்டியில் 408 ரன்கள் குவிக்கப்பட்டது.

முதல் அணி

முதல் அணி

உலக கோப்பை வரலாற்றில் முதல் முறையாக அடுத்தடுத்த போட்டிகளில் 400 ரன்களை கடந்த முதல் அணி என்ற பெருமையை தென் ஆப்பிரிக்கா இதன்மூலம் பெற்றுள்ளது.

மே.இ.தீவுகளுக்கு எதிராக

மே.இ.தீவுகளுக்கு எதிராக

44 நாட்களுக்கு முன்பாக தென் ஆப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்க் மைதானத்தில் நடந்த போட்டியில் மே.இ.தீவுகளுக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா 439 ரன்கள் குவித்தது.

டி வில்லியர்ஸ் உலக சாதனை

டி வில்லியர்ஸ் உலக சாதனை

அந்த போட்டியின்போதுதான், 31 பந்துகளில் சதம் அடித்து தென் ஆப்பிரிக்க கேப்டன் டி வில்லியர்ஸ் உலக சாதனை படைத்திருந்தார்.

3 முறை சாதனை

3 முறை சாதனை

எனவே கடந்த 44 நாட்களுக்குள் 3 முறை 400 ரன்களை கடந்து சாதித்து காண்பித்துள்ளது தென் ஆப்பிரிக்க அணி.

இந்தியாவிடம் சாதனை

இந்தியாவிடம் சாதனை

2007 உலக கோப்பையில் பெர்முடா அணிக்கு எதிராக, இந்தியா, 5 விக்கெட் இழப்புக்கு 413 ரன்கள் எடுத்ததே உலக கோப்பையில் ஒரு அணி எடுத்த அதிகபட்ச ரன்னாகும்.

2வது இடத்தில் தென் ஆப்பிரிக்கா

2வது இடத்தில் தென் ஆப்பிரிக்கா

தென் ஆப்பிரிக்கா நடப்பு உலக கோப்பையில், 411 ரன்கள் குவித்து, இந்தியாவுக்கு அடுத்த இடத்தை பிடித்துள்ளது.

இந்திய சாதனை சமன்

இந்திய சாதனை சமன்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 5 முறை 400 ரன்களுக்கு மேல் குவித்த அணி என்ற பெருமையை இந்தியா பெற்றிருந்தது. தற்போது தென் ஆப்பிரிக்காவும் ஐந்து முறை ரன்களை குவித்து அந்த சாதனையை சமன் செய்துள்ளது.

இந்த நாடுகள் மட்டுமே..

இந்த நாடுகள் மட்டுமே..

இலங்கை 2 முறை 400 ரன்களையும், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தலா 1 முறையும் 400 ரன்களை கடந்துள்ளன.

Story first published: Tuesday, March 3, 2015, 14:23 [IST]
Other articles published on Mar 3, 2015
English summary
Records continue to tumble at ICC World Cup 2015 and bowlers are at the receiving end. South Africa on Tuesday set another new benchmark in World Cup history, against Ireland at Manuka Oval. South Africa smashed 411/4 in 50 overs in their Pool B match against minnows Ireland to post their second consecutive 400 plus total. This was after their 408/5 against West Indies on February 27 in Sydney.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X